நவீன பஞ்சதந்திரக் கதை-20

எறும்பு எக்ஸ்பிரஸ்!
அந்த ரயில் எங்குமே நிற்காது... புற்றிலிருந்து கிளம்பினால் நேரே உணவு இருக்கும் இடம் எவ்வளவு தூரமென்றாலும் சரி 'கூ..கூ... சிக்கு... புக்கு.... சூப்பர்ஃபாஸ்ட்... உணவை தேடி கண்டுபிடித்து... பிறகு உணவை எடுத்து கொண்டு மீண்டும் புற்றை நோக்கி திரும்பும் எறும்பு எக்ஸ்பிரஸ்!

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் அதே தான் என்ன ஒரு வேகம்..! வழியில் யாராவது குறுக்கே போனால்... அவ்வளவுதான் சிக்கு... புக்கு... உடம்பெல்லாம் ஊசி போட்டு பிடுங்கிவிடும்.

அன்று அந்த எறும்பு எக்ஸ்பிரஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. "சீக்கிரம், ம்..." ராணியாரின் கட்டளைக்குரல் கேட்டுகொண்டே இருந்தது.

"மழைக்காலம் நெருங்கிவிட்டது. இன்னும் புற்றில் நிறைய வேலைகள் இருக்கிறது" என்று பரபரத்து கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு தானிய அறைகள் நிரம்பி இருந்தாலும் மேலும் மேலும் எறும்பு எக்ஸ்பிரஸில் உணவுகள் கொண்டு வரப்பட்டு அறைகள் அனைத்தும் தொடர்ந்து நிரப்பப்பட்டு கொண்டேயிருந்தன. பரபரப்புடன் எறும்புகள் இயங்கி கொண்டிருந்தன. அப்போது ஒரு ஜூனியர் எறும்பு மட்டும் ராணியாரை நோக்கி ஒரு கேள்வியுடன் சென்றது.

"மன்னிக்க வேண்டும் ராணியாரே! உங்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை" என்றது.

தன் முன் நின்று கொண்டிருந்த ஜூனியர் எறும்பை பார்த்த ராணியார் புன்னகைத்தார்...

"மம்... என்ன?" ஆனால் குரலில் மட்டும் கொஞ்சம் கடுமை.

"ராணியார் அவர்களே, ஏற்கெனவே புற்றில் எக்கச்சக்கமாக உணவு கையிருப்பாக இருக்கிறது..." என்றது பேச்சை இழுத்தது ஜூனியர் எறும்பு.

"அது எனக்கும் தெரியும்... அதிகப் பிரசங்கி..." என்று ஆரம்பத்திலேயே குட்டு வைத்தார் ராணியார்.

"இ... இல்லை... மன்னிச்சுடுங்க" என்று ஜூனியர் சமாளிப்பதற்குள், அங்கு மற்ற ஜுனியர் எறும்புகளின் கூட்டமே கூடிவிட்டதையும் ராணியார் கவனிக்க தவறவில்லை.

"ஏன் மேலும் மேலும் தானிய உணவு வந்துகொண்டே இருக்கவேண்டும்... கொஞ்சம் 'ரெஸ்ட்’ எடுக்கலாமே. நாங்க விளையாடக்கூட அனுமதிக்கப் படுவது இல்லை. எங்க அப்பா அம்மாவுக்கு எக்ஸ்பிரஸ் ஓட்ட உதவி செய்தே பொழுதுபோய்விடுகிறது..." என்று கேள்வியை ஒரு வழியாக கேட்டே விட்டது அந்த ஜூனியர் எறும்பு.

"இருப்பதை சாப்பிட்டுவிட்டு பிறகு மறுபடியும் உணவு தேடலாமே?" இது இன்னொரு ஜூனியரின் தைரியக்குரல்.

"அன்பு எறும்புக்குழந்தைகளே..." ராணியார் பரிவுடன் பேசத் தொடங்கினார்.

"நாம் எறும்பு இனத்தை சேர்ந்தவர்கள். மனிதர்களுக்கே சுறுசுறுப்பை கற்றுக்கொடுத் தவர்கள் நாம்தான். உழைக்கும் நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்... அப்போதுதான் ஓய்வுநேரத்தில் நிம்மதியாக இருக்க முடியும். உங்களுக்கு விளக்கமாக ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பித்தது ராணியார்கள். ஜூனியர் எறும்புகளும் கதை கேட்க தயாராகின.

"ஒரு காலத்தில் நம் எறும்பு ராஜாவை பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்தது.

'நான் ஜாலியாக இருக்கிறேன்.ஆனால், நீ மட்டும் எப்போது பார்த்தாலும் உழைத்து கொண்டே இருக்கிறாய். உனக்கே இது அசிங்கமாக இல்லையா..." என்று கூறி பரிகாசித்தது. ஆனால் அதை பொருட் படுத்தாமல் நம் எறும்பு ராஜா உழைத்து உழைத்து புற்றில் உணவு சேர்த்து கொண்டேயிருந்தார்.

ஒருநாள் கடும் மழை பெய்தது. குளிரும் அடித்தது. இதனால் வெட்டுக்கிளி மிகவும் அவதிப்பட்டது. நம் எறும்பு ராஜாவிடம் வந்து, "எறும்பு ராஜா, கொஞ்சம் வெளியே வாருங்கள்" என்று அழைத்தது. வெளியில் வந்த எறும்பு ராஜா, "ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோருமே உழைப்பாளிகள்தான்" என்றது.

"வெளியில் பயங்கர மழையாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நான்கு நாட்களாக நான் பட்டினி... ஆமாம், நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?!" என்றது வெட்டுக்கிளி.

"மழைக்காலத்துக்கு முன்பு உழைத்து சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன்" என்றது எறும்பு ராஜா. எறும்பு கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு வெட்டுக்கிளி எவ்வளவோ கெஞ்சியது. ஆனால், எறும்பு ராஜா மறுத்துவிட்டார்.

இந்த கதையை தான் மனிதர்கள் பள்ளியிலும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்" என்று கதை சொல்லி முடித்தது ராணியார். வேறு எதுவும் பேசாமல் ஜூனியர் எறும்புகள் எக்ஸ்பிரஸ் ரயிலை வேகமாக விரட்டி சென்றன.

சரியா....தப்பா?!

''டேய் விக்கி, நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கே?! உன் நண்பன் ராகுல் எவ்வளவு 'ஸ்மார்ட்டா' இருக்கிறான். அவனை பார்த்து திருந்த முயற்சி செய்" - இது என் வீட்டுலையும், வகுப்பிலும் நான் அடிக்கடி கேட்கிற வசனம்!

அப்படி எந்த விதத்தில் ராகுலைவிட நான் குறைஞ்சு போயிட்டேன்னு எனக்கு தெரியலைங்க. நானும் ராகுல் செய்ற டெக்னிக்ஸை யூஸ் பண்ணி பார்க்கறேன். ஆனா, அவனை எல்லாரும் பாராட்டுறாங்க. என்னை மட்டும் திட்டுறாங்க.

ஒருநாள் விளையாட்டு வகுப்பின் போது ராகுலுக்கும், கௌதமுக்கும் சரியான சண்டை! இந்த கௌதம் இருக்குறானே, அவன் எப்பவும் எல்லாரையும் திட்டிக்கிட்டே இருப்பான். அன்றைக்கும் ராகுலைப் பார்த்து 'சப்பை மூக்கு'ன்னு செல்லிட்டான். உடனே, ராகுல் என்ன செஞ்சான் தெரியுமா? டீச்சர்கிட்ட போய், ''உங்களை 'சப்பை மூக்கு' ன்னு கௌதம் சொல்றான்"ன்னு மாட்டி விட்டுட்டான்.

டீச்சரும், டென்ஷனாகி கௌதமை கூப்பிட்டு பள்ளியில் இருக்குற செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்தச் சொல்லிட்டாங்க. இந்த சம்பவத்துக்கு பிறகு கௌதம் யாரையுமே திட்டுவதில்லை. இது தெரிஞ்சு ராகுலோட 'ஸ்மார்ட்னெஸ்ஸை' வகுப்பில் எல்லோரும் பாராட்டினாங்க. இன்னொரு நாள் வருண் என்னை கீழே தள்ளி விட்டுட்டான். உடனே நானும், ராகுல் மாதிரியே டீச்சர்கிட்டே போய், ''டீச்சர், உங்களை வருண் கீழே தள்ளி விட்டுட்டான்"-னு சொன்னேன். டீச்சர், என்னை ஒரு நிமிஷம் முறைச்சுப் பார்த்தாங்க. ''நான் வேணா வருணை கூப்பிடட்டா டீச்சர்?" என்று திரும்பினேன். டீச்சர், என்னை பக்கத்தில் வரச்சொல்லி என் காதை திருகி கிரவுண்டில் கிடக்கும் குப்பை பேப்பர் எல்லாத்தையும் பொறுக்க வைச்சிட்டாங்க.

நீங்களே சொல்லுங்க, நான் செஞ்சது தப்பா?! நானும் ராகுல் மாதிரிதானே செஞ்சேன், பின்னர் ஏன் டீச்சர் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தாங்க. ஒண்ணுமே புரியலையே! உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்!


கதை -இருட்டு!

ராம் பத்து வயது பையன். அன்று பௌர்ணமி...

அந்த பௌர்ணமி நிலா, மல்லிகைப் பூவை போல வெண்மையாகவும், அம்மா வைக்கும் நெற்றி பொட்டை போல் வட்டமாகவும் கள்ளம் கபடமற்று சிரித்தது.

ராம், தன் செல்ல நாய்க் குட்டியுடன் இரவில் அந்த சாலையில் நடந்து சென்றான். அப்போது அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

'இவ்வளவு வெளிச்சமாக அழகாக இருக்கும் நிலா, அடுத்த பதினைந்து நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இருட்டாகி விடுகிறதே..! ஏன்? கடவுள் நிலாவை, சூரியனைப் போல் தினமும் ஏன் ஒளிர விடவில்லை? நிலா, எல்லா நாட்களும் வெளிச்சமாக இருந்தால், நன்றாக இருக்குமே..?' என்று எண்ணினான்.

அப்போது அந்த பக்கமாக ஒரு முதியவர் தட்டுத்தடுமாறி செல்வதை கவனித்தான். அவரிடம் பேசினான்.

''தாத்தா, உங்களுடன் துணைக்கு ஒருவரை கூட்டிக் கொண்டு வர வேண்டியது தானே?" என்றான்.

''என் பேரனை காலையில் இருந்து காணவில்லை. அவனைதான் தேடிக்கிட்டு இருக்கிறேன். அதனாலதான் இருட்டு என்று கூட பார்க்காமல் அவனை தேடிக் கொண்டு வந்தேன்" என்றார்.

''தாத்தா என்ன சொல்றீங்க?! நல்லா வெளிச்சமாகத்தானே இருக்கிறது..." என்றான் ராம்.

''எனக்கு மாலைக்கண் நோய் இருக்குது. ஆறு மணிக்கு மேல் எனக்கு கண் தெரியாது. அதற்கு பிறகு எல்லாமே எனக்கு இருட்டுதான்" என்று தழுதழுத்த குரலில் சொன்னார் தாத்தா. ''கவலைப்படாதீங்க தாத்தா, உங்க பேரனை கண்டுபிடிக்க நான் உதவி செய்கிறேன். நாளை காலையில் இரண்டு பேரும் சேர்ந்தே அவனை தேடலாம். ஆனால், தாத்தா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தீர்த்து வைப்பீங்களா?!" என்றான் ராம்.

''கேளுப்பா..." என்றார் தாத்தா.

''தாத்தா, நிலா தினமும் வெளிச்சமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், ஏன் 15 நாட்களில் நிலவு இருட்டாவது போல் இறைவன் படைத்து விட்டார். இதுதான் எனக்கு புரியவில்லை" என்றான்.

'தம்பி, எங்களை போன்ற மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கும் இந்த நிலவு வாழ்க்கைதான்! அதை சக மனிதர்கள் உணருவதற்காகதான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நிலவிலும் இந்த இருட்டு&வெளிச்சப் பாடம்!

ஒரு மனிதன் வெளிச்சத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் அதனால் விரைவில் அவன் கண் கெட்டுப்போகும். நடுவில் இருட்டு வந்து போனால்தான் வெளிச்சத்தின் அருமை புரியும். அதுபோல, வெற்றியையே சந்திக்கும் ஒருவன் தோல்வியையும் சந்தித்தால்தான், மீண்டும் உத்வேகத்துடன் நினைத்ததை அவனால் அடைய முடியும். இருட்டை உணர்ந்தால்தான் வாழ்க்கை பயணமும் இனிதாய் அமையும்" என்றார் தாத்தா.

சந்தேகம் தீர்ந்த சந்தோஷத்தில் பௌர்ணமி நிலவு போல் ராம் முகம் மலர்ந்தது.



நவீன பஞ்சதந்திரக் கதை -19

மனுஷங்க மாறிட்டாங்க....

காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது.

அட, இதென்ன காக்கா ஸ்கூல் என்று யோசிக்கிறீர்களா?! தினமும் மாலை 5 மணிக்கு எல்லா காக்கைகளும் கூடு திரும்புவதற்கு முன்பு ஆங்காங்கே கொஞ்ச நேரம் மின்கம்பம், புளியமரம், அரசமரம், ஆலமரம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு 'கா... கா'என கத்திக் கொண்டு இருக்குமே... அதுதான் இங்கு காக்கா ஸ்கூல்.

இதோ அரசமர பேருந்து நிலையத்தில் காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது. குஞ்சு காகம் முதல் வயதான காகங்கள் வரை அனைத்தும் ஆஜராகியிருந்தன. 'இன்னைக்கு டீச்சர் என்ன பாடம் நடத்துவாங்களோ...தெரியலையே?!'என்று குஞ்சு காகங்கள் எல்லாம் கா... கா... மொழியில் பேசிக்கொண்டு இருந்தன.

அப்போது வயதான அண்டங்காக்கா ஒன்று வந்து அரசமரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தது.

"நண்பர்களே, எல்லோரும் வந்து விட்டார்களா?" என்றது.

"தலைவரே, எல்லோரும் வந்துட்டாங்க... குழந்தைங்க ரொம்ப ஆர்வமா இருக்குதுங்க. சீக்கிரமா பாடத்தை ஆரம்பிங்க" என்றது இருட்டு நிற காக்கா.

"குழந்தைகளே, இன்னைக்கு நாம சுற்றுச்சூழல் பத்தி பேசப்போறோம். குறிப்பா மனுஷங்க சுற்றுச்சூழலை எப்படி கெடுத்துட்டு வர்றாங்கன்னு சொல்லப்போறேன். இதன் மூலம் எதிர்காலத்துல நீங்க ஜாக்கிரதையா இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தது அண்டங் காக்கா. குஞ்சு காகங்கள் எல்லாம் சிரத்தையுடன் பாடத்தை கவனிக்க ஆயத்தமாயின.

"நகரத்தில் சுற்றுச்சூழல் ரொம்பவும் மோசமாகிப் போச்சு. ரோட்டை விரிவுபடுத்துற, பாலங்கட்டுறன்னு சொல்லி மரங்களை எல்லாம் வெட்டிக்கிட்டே வர்றாங்க. இதனால நம்மோட தோழர்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துட்டே வர்றாங்க. அதுமட்டுமில்லாம தண்ணீரும் ரொம்பவே கெட்டுப்போச்சு..." என்று அண்டங்காக்கா பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஒரு குஞ்சு காக்கா இடைமறித்து ஒரு கேள்வி கேட்டது.

"நம்ம காக்கா இனத்தை பத்தி மனுஷங்க கொஞ்சம் கூட நெனச்சே பார்க்கமாட்டாங்களா?! மரங்களை வெட்டுனா நாம பாதிக்கப்படுவோம்னு அவங்களுக்கு தெரியாதா?!" என்றது.

"வெரிகுட்! ரொம்ப நல்ல கேள்வி கேட்டாய். மனுஷங்க ரொம்ப மாறிட்டாங்க. அவங்களுக்கு நம்மளை போன்ற பறவைகளையும், பிற உயிரினங்களையும் பத்தியெல்லாம் யோசிக்க நேரமே கிடையாது. ஏன்னா, அவங்க வாழ்க்கை அசுரவேகத்துலதான் சுத்திக்கிட்டு இருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். ஒரேயடியா மனுஷங்க நம்மளை மறந்துடலை. அது பத்தி ஒரு கதையே இருக்கு..." என்று கதை சொல்ல ஆரம்பித்தது அண்டங்காக்கா.

"கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி கருத்தழகு என்ற காக்கா வாழ்ந்துச்சு. தீனிக்காக ஒருநாள் ரொம்ப தூரம் போயிடுச்சு. அப்போ, அதுக்கு பயங்கரமான தாகம்! 'எங்காவது தண்ணி இருக்காதா!'என்று ஒரு கிராமத்தை சுத்தி சுத்தி பறந்துச்சு. ஒரு வீட்டுக்கு வெளியில பானையில கொஞ்சம் தண்ணி இருக்கறதை பார்த்து சந்தோஷப்பட்டுச்சு. ஆனா, பானையில இருந்த தண்ணி கொஞ்சமா இருந்துச்சு. காக்கையாலே குடிக்க முடியலை. அப்போ ஒரு 'பளீர்'ஐடியா பண்ணுச்சு.

கீழே கிடந்த கூழாங்கற்களையெல்லாம் ஒவ்வொண்னா பொறுக்கி பானைக்குள்ளே மெதுவா போட்டுச்சு. பானையில இருந்த தண்ணியும் மெல்ல மெல்ல பானையோட விளிம்புக்கு வந்துச்சு. அந்த தண்ணியும் சுத்தமானதா வடிகட்டினதா இருந்துச்சு.

காக்காவும் சந்தோஷமா தண்ணி குடிச்சுச்சு. காக்காவோட இந்த செயலை சில மக்கள் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, கருத்தழகு காக்காவின் அறிவுப்பூர்வமான செயலை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாங்க.

'கருத்தழகு காக்கா மாதிரி எந்தவொரு விஷயத்திலும் விடாமுயற்சி இருக்கணும், தண்ணீரை சுத்தப்படுத்தி குடிக்கணும்'அப்படீங்கிற விஷயத்தை மனுஷங்க நம்மோட இனத்தை பார்த்து கத்துக்கிட்டாங்க. இதுக்கு நன்றி சொல்லும் விதமா, இறந்து போன அவங்களோட முன்னோர்களை நம் வடிவமா பார்க்கறாங்க. சில மனுஷங்க நம் இனத்துக்கு உணவு படைச்சுட்டுதான் அவங்களே சாப்பிடுவாங்க. காய்ச்சி வடிகட்டிய நீரை நம் கருத்தழகு காக்கை போல குடித்து உடலை சுத்தமாக பேணாமல் போனதால் வருகிற ஒருவித வலிப்புக்கு 'காக்கா வலிப்பு' என்றும் அழைக் கிறார்கள்" என்று என்று கதை சொல்லி முடித்தது அண்டங்காக்கா.

மேலும் குஞ்சு காகங்கள் உள்பட அனைத்து காகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை சொன்னது அண்டங் காக்கா.

"இப்போதெல்லாம் மனுஷங்க 'பாக்கெட் வாட்டர்’-தான் அதிகமாக பயன்படுத்துறாங்க. பாலித்தீன் பையில் இருக்கும் தண்ணீர் மிகவும் ஆபத்து. அதை நீங்கள் யாரும் குடிக்கக்கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்" என்று ஒரு 'ஹெல்த் டிப்ஸ்'சொல்லிவிட்டு பறந்தது அண்டங்காக்கா.

இன்றைய ஸ்கூலில் பல விஷயங்களை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் குஞ்சு காகங்களும், மற்ற காகங்களும் குதூகலத்துடன் கூடுகளுக்கு பறந்தன.

-இரா.நடராசன்

சாத்தானின் சீடன்!

நோபல் பரிசு பெற்ற கதை!

ஞாயிற்றுக்கிழமை என்றால் நிச்சயம் அந்த பெண்ணை தேவாலயத்தில் பார்க்க முடியும். ஒருவாரம் கூட அவள் பிரார்த்தனைக்கு வராமல் இருந்ததில்லை. அவளது பெயர் அன்ஸி.

இறைவனை வழிபடுபவர்கள் என்றால் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய எண்பது சதவீதம் பேர் இருப்பார்கள். மிச்சமிருக்கும் இருபது சதவீதம் பேரில் இறைநம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையிருந்தும் வழிபட விருப்பமில்லாதவர்கள் என்று எல்லோரையும் அடக்கிவிடலாம். ஆனால், சாத்தானை வழிபடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?!

இறைவன் என்பவர் அன்பு, கருணை என்று அத்தனை நற்குணங்களையும் கொண்டவர். அவரை வழிபடலாம். ஆனால் சாத்தானோ தீய குணங்களின் முழு வடிவம். அப்படியிருந்தும் கூட சாத்தானை ஒருவன் வழிபடுகிறான் என்றால் அவன் எவ்வளவு மோசமானவனாக இருப்பான்?

ரிச்சர்ட் என்ற இளைஞன் பகிரங்கமாகவே ‘நான் ஒரு சாத்தானின் சீடன்' என்று அறிவித்துக் கொண்டான்.

அந்த ரிச்சர்ட் வேறு யாருமில்லை. தீவிர தெய்வ பக்தையான அன்ஸியின் மகன். தாய் இறைவனையும், மகன் சாத்தானையும் வழிபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே பாசமும் நேசமும் எப்படியிருக்கும்?!

இருவரும் பிரிந்துதான் வாழ்ந்தார்கள். இதற்கிடையில் ரிச்சர்டின் தந்தை திமோதி இறந்து போனார். அவரின் மரணச்செய்தியோடு மற்றொரு அதிர்ச்சியும் அன்ஸிக்காக காத்திருந்தது. திமோதி இறந்துபோவதற்கு முன்னர் தனது முழுச்சொத்தையும் ரிச்சர்டின் பெயரில் எழுதிவைத்துவிட்டார். எனவே அன்ஸி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.

ரிச்சர்டின் உறவினர்கள் அனைவருமே அவனை வெறுத்தனர். சமயகுருவான ஆன்டர்சன் மட்டுமே ரிச்சர்ட் மனம் திருந்தி வாழ்வான் என்று நம்பினார். அதேவேளையில், அவனது நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை என்று எண்ணிவிடுவார்களோ என்றும் பயந்தார்.

ரிச்சர்டை எச்சரிப்பதற்காக அவன் வீட்டுக்குப் போனார் ஆன்டர்சன். அவன் வீட்டில் இல்லை. உடனே தம்மை வந்து சந்திக்குமாறு கடிதம் எழுதிவைத்துவிட்டு திரும்பினார்.

அந்த காலகட்டத்தில், அரசுக்கு எதிராக யாராவது செயல்படுவதாக சந்தேகம் வந்தாலே போதும், உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு தூக்குத்தண்டனை கொடுத்து விடுவார்கள். ரிச்சர்டின் சமயவிரோத போக்கு வெளியே தெரிந்தால் ஆபத்துதானே?! எனவே ரிச்சர்ட் அடிக்கடி தன்னை வந்து பார்க்க வேண்டுமென்று ஆன்டர்சன் விரும் பினார்.

சமயகுருவை தொடர்ந்து சந்திக்கும் ஒருவன்மத விரோதியாக எப்படி இருக்க முடியும் என்று யோசிப் பார்கள் அல்லவா?! எப்படியோ, ரிச்சர்ட் உயிர் பிழைத்து வாழ்ந்தால் போதும், அவனை திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ஆன்டர்சன் உறுதியாக நம்பினார்.

கதவில் செருகியிருந்த கடித்தத்தை பார்த்துவிட்டு ரிச்சர்ட் சமயகுருவின் வீட்டிற்கு போனான். அவரது எச்சரிக்கைகளை அவன் காது கொடுத்து கேட்கவே இல்லை. வழக்கம்போல அலட்சியம் செய்தான்.

சமயகுரு ஆன்டர்சனும், ரிச்சர்டும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ரிச்சர்டின் சகோதரன் கிறிஸ்டி வந்தான். அன்ஸியின் உடல்நலம் மோசமாக இருப்பதாகவும், அவன் சமயகுருவை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தான்.

தன்னை பெற்ற தாயின் உடல்நிலை சரியில்லை என்ற போதும் கூட அவளை சந்திக்க ரிச்சர்ட் விரும்பவில்லை. அவனை கொஞ்சநேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு ஆன்டர்சன் கிறிஸ்டியோடு கிளம்பி போனார்.

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. ரிச்சர்ட் எழுந்துபோய் கதவை திறந்ததுதான் தாமதம். காவலர்கள் உள்ளே நுழைந்து அவனை சூழ்ந்துகொண்டார்கள்.

காவலர்களின் தலைவர் அவனை நெருங்கிவந்து "மதிப்பிற்குரிய ஆன்டர்சன் அவர்களே! அரசுக்கு எதிராக செயல்படு வருவதற்காக உங்களைக் கைது செய்கிறோம்' என்றார்.

உலகெங்கும் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று ஆன்டர்சன் ஆசைப்பட்டார். ஆனால் அதையும் கூட ராஜதுரோகம் என்று தவறாகக் கருதிவிட்டார்கள். அவர் செய்த சமூகப்பணிக்கு பரிசாக கிடைத்தது தூக்குத் தண்டனை மட்டும்தான்.

ஆனால் காவலர்கள் கைது செய்தது ஆன்டர்சனை அல்ல. அவரைத்தான் கிறிஸ்டி அழைத்துச் சென்றுவிட்டானே!

ரிச்சர்ட் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவே இல்லை. ஆன்டர்சனின் அங்கியை அணிந்து கொண்டு காவலர்களோடு கிளம்பி விட்டான். சமயகுருக்கள் மட்டுமே அணியும் அங்கி அது. எனவே அவன்தான் ஆன்டர்சன் என்று காவலர்களும் நம்பிவிட்டார்கள்.

சாத்தானை வழிபடும் ஒருவன் மதகுருவை காப்பதற்காக தன்னுடைய உயிரை ஏன் இழக்க வேண்டும்?

ரிச்சர்ட் மனம் திருந்தி வாழ முற்பட்டான் என்பதுதான் உண்மை. அவனது இயல்பான பிடிவாத குணம் அந்த எண்ணத்தை தடுத்து கொண்டிருந்தது.

இப்போது தனது தீய இயல்புகள் அனைத்துக்கும் ஒரே நொடியில் விடை சொல்லிவிட்டான் ரிச்சர்ட். கூடவே தான் செய்த தவறுகள் அனைத்துக்குமான தண்டனையையும் விரும்பி ஏற்றுக்கொண்டான். அது அவனுக்கான தண்டனை இல்லை என்ற போதிலும்கூட...

ரிச்சர்ட் விசாரிக்கப்பட்டான். அதிகாரிகளால் அவன் செய்த ஆள் மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஆன்டர்சனின் மனைவி சூடியத் உண்மையை சொல்லி விட்டாள்.

இப்போது ரிச்சர்டின் மீது ஆள்மாறாட்டம் செய்தான் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. தண்டனை? மாற்றம் ஏதுமில்லை. தூக்குத் தண்டனை உறுதியாகிவிட்டது.

ரிச்சர்ட் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இதை வேடிக்கை பார்ப்பதற்காக பெருங்கூட்டமே கூடிவிட்டது. ரிச்சர்டை தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டார். அதே நேரத்தில் "நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்று சத்தம் கேட்டது. எல்லோரும் சத்தம் வந்த திசைநோக்கி திரும்பினர்.

அங்கே ஆன்டர்சன் நின்று கொண்டிருந்தார். தான் குற்றமற்றவன் என்பதற்காக ஆதாரங்களை காட்டினார். தான் தப்பித்ததோடு மட்டுமின்றி ரிச்சர்டின் உயிரையும் காப்பாற்றினார்.

சாத்தானின் சீடன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? அமைதியை வலியுறுத்தி போதனை செய்து கொண்டிருக்கிறார்.

உலகில் மனிதனாக பிறந்த எவனும் நிச்சயம் கெட்டவனாக இருக்கமுடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவன் மனம் மாறி தீய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். திருந்தி வாழ வாய்ப்பு கொடுத்தால் அவனும் நல்லவன் ஆகிவிடுவான்.

இக்கதைக்கு சொந்தக்காரர் நாடக மேதையான பெர்னாட்ஷா. ‘சாத்தானின் சீடன்' என்ற தலைப்பில் அவர் எழுதிய நாடகத்தின் கதையே இது. பெர்னாட்ஷாவின் இலக்கிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு 1925-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


நவீன பஞ்சதந்திரக் கதை-18

ஓடியது பூனை... ஜெயித்தது ஆமை!

டாம் பூனையும், ஜெர்ரி எலியும் அடிக்கிற லூட்டிகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்றும் அப்படித்தான்... டாம் பூனைக்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை குடித்துக் கொண்டிருந்தது ஜெர்ரி எலி. அதை பார்த்த டாமுக்கு வந்ததே ஒரு 'மெகா' கோபம்...அவ்வளவுதான்!

ஒரே பாய்ச்சலில் ஜெர்ரி எலியை அமுக்க பாய்ந்தது. 'நல்லவேளை பிழைத்தோம்...தப்பித்தோம்' என்று நினைத்து தலைதெறிக்க ஓடியது ஜெர்ரி. ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனை போல ஜெர்ரி ஓட, திருடனை பிடிக்கும் போலீசை போல டாம் அதை துரத்த... பல கிலோமீட்டர்களை கடந்து விட்டன. வேகமாக ஓடிய ஜெர்ரி பாறை போன்ற ஒன்றின் மீது 'டமாரென' மோதியது. பின் தொடர்ந்து வந்த டாமும் அதன் மீது மோதி கீழே விழுந்தது.

''டேய் ஜெர்ரி, இந்த இடத்தில் எப்படிடா பாறை வந்துச்சு?'' என்று பகை மறந்து விசாரித்தது டாம்.

''அதாண்ணே, நானும் யோசிக்கிறேன்'' என்று மூச்சிறைத்து கொண்டே பதில் சொன்னது ஜெர்ரி.

''யாரை பார்த்து பாறைன்னு சொல்றீங்க...'' என்று கம்பீரமாக முதுகை திருப்பி கேட்டது ஆமை.
''அட நம்ம ஆமையாரா! உன்னை முதுகு பக்கமாக பார்க்கும்போது சின்ன பாறை மாதிரியே இருந்தது'' என்று கிண்டலடித்தது டாம்.

''நீங்க மட்டும் என்ன? ரொம்ப அழகோ... உனக்கு நீளமான காது... அவனுக்கு கூன் விழுந்தது போல் முதுகு'' என்று டாம் பூனையையும், ஜெர்ரி எலியையும் சேர்த்து வைத்து பதிலடி கொடுத்தது ஆமை.

''ஏய், யாரை கிண்டலடிக்கிறே?! எங்க அண்ணன் டாமை பற்றி உனக்கு தெரியாது. ஓட்டப்பந்தயத்துல அவரு சூப்பர் ஸ்டாரு'' என்று ஆமையை வம்புக்கு இழுத்தது ஜெர்ரி எலி.

''என்னோட கதை உங்களுக்கு தெரியும்ல. ஓட்டப்பந்தயத்துல முயலையே ஓரங்கட்டியவன்'' என்று பெருமையடித்தது ஆமை.

''சரி, உன்னோட திறமைக்கு ஒரு சவால். உனக்கு தைரியம் இருந்தால் எங்க டாமுடன் மோதிப் பாரு'' என்று ஆமையை போட்டிக்கு அழைத்தது ஜெர்ரி.

''போட்டிக்கு நான் தயார். போட்டில நான் ஜெயிச்சுடுவேன். உங்க அண்ணன் தோத்துட்டா என்ன செய்வே?'' என்றது ஆமை.

''ஒருவேளை எங்க அண்ணன் தோத்துட்டா, அவரு ஒருவாரத்துக்கு பாலே குடிக்க மாட்டாரு...'' என்று டாமை மாட்டிவிட்டது ஜெர்ரி.

'ஆஹா, சமயம் பார்த்து நம்மளை சிக்கலில் மாட்டிவிடுறானே...' என்று நினைத்த டாம் பூனை, கோபப்பார்வையால் ஜெர்ரி எலியை முறைத்தது. அதை புரிந்து கொண்ட ஜெர்ரி, ''அண்ணே, கவலைப் படாதீங்க. உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது. ஓட்டப்பந்தயத்துல நீங்க சூரப்புலி'' என்று தைரியம் சொன்னது ஜெர்ரி.

''ஆமையாரே, நாங்கள் போட்டிக்கு தயார். நாளை காலை ஏழு மணிக்கு போட்டியை வெச்சுக்குவோம். நீயும் சீக்கிரமாக வந்துடு'' என்றது ஜெர்ரி.

அடுத்தநாள் காலை போட்டி நடக்கும் இடத்துக்கு இரண்டும் வந்து சேர்ந்தன. ஏற்கெனவே ஆமை வந்து காத்திருந்தது.

''ஆமையாரே, இங்கிருந்து போட்டியை தொடங்குவோம். அதோ அந்த இடத்துல இருக்குற சிவப்பு பூ பூத்திருக்குற மரத்து வரைக்கும் போகணும்'' என்று சொல்லி விட்டு கோடு போட்டது ஜெர்ரி எலி.

ஆமையும், டாமும் கோட்டின் மீது நின்றன. ஜெர்ரி நடுவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

''ரெடி...1... 2... 3...'' போட்டியை ஆரம்பித்தது ஜெர்ரி. ஆமையும், டாமும் ஓட ஆரம்பித்தன. போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்று ஓட்டம் பிடித்தது டாம். ஓடும் பாதை முழுவதிலும் ஒரு அடி உயரத்துக்கு புற்கள் வளர்ந்திருந்தன. இதனால், ஆமை எங்கு ஓடுகிறது, டாம் பூனை எங்கு ஓடுகிறது என்பது தெரியாமல் குழம்பி போயிருந்தது ஜெர்ரி எலி.

போட்டி முடியும் இடத்துக்கு வந்து சேர்ந்தது டாம் பூனை.

''என்ன டாம்?! ஏன், இவ்வளவு லேட். நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு'' என்று முதுகை திருப்பி சொன்னது ஆமை. ஆமையை கண்டு அதிர்ச்சியடைந்தது டாம்.

''நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தே? நான் உன்னைவிட வேகமாகத்தானே வந்தேன்'' என்று குழப்பத்தில் கேட்டது டாம்.

''நாம் இருவரும் ஒன்றாகதானே ஓட ஆரம்பித்தோம். அப்புறமென்ன உனக்கு சந்தேகம்?'' என்றது ஆமை.

'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று நினைத்து பயந்த டாம், ''ஆமையாரே, இங்கிருந்து போட்டி தொடங்கிய இடத்துக்கே மீண்டும் ஓடுவோம். இதில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்'' என்றது டாம் பூனை. அதற்கும் சம்மதித்தது ஆமை. ரேஸ் காரை போல மீண்டும் வேகமெடுத்தது டாம். ஆனால், போட்டி தொடங்கிய இடத்தில் ஜெர்ரிக்கு பக்கத்தில் காத்திருந்தது ஆமை. அதை கண்ட டாம் பூனைக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. 'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று வருந்தியது டாம்.

அப்போது பேசத் தொடங்கியது ஆமை.. ''டாம், கவலைப்படாதே! நீ தான் போட்டியில் ஜெயித்தாய். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். நாங்கள் இருவருமே 'டுவின்ஸ்'. போட்டி தொடங்கியவுடன் சிறிது தூரத்திலே நான் நின்று கொண்டேன். போட்டி முடிந்த இடத்தில் என் தம்பிதான் இருந்தான். அவன்தான் உன்னை வரவேற்றான். அங்கிருந்து நீ மீண்டும் போட்டியை ஆரம்பிப்பாய் என்று நினைத்தோம். அதேமாதிரி நீயே மீண்டும் போட்டியை ஆரம்பித்தாய். அப்போது நான் இங்கு வந்து விட்டேன். அதோ பார் என் தம்பி வருகிறான்'' என்று கிழக்கு திசையை காட்டியது ஆமை. சற்று தொலைவில் இன்னொரு ஆமை வந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆமை பேசியது.

''டாம், நீ ஓடியதுதான் பள்ளிக்கூட கல்வி. நாங்கள் செய்தது சமயோஜித புத்தி. வெறும் பள்ளிக்கூட அறிவு மட்டும் போதாது. சமயோசித அறிவும் தேவை. எனவே பாடத்திற்கும் படிப்பிற்கும் வெளியேயும் நாம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தியது ஆமை.

ஆமை சொன்னதை டாமும், ஜெர்ரியும் கேட்டுக் கொண்டன. பின்னர் அனைவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.


கதை -அன்பின் வழி!

நோபல் பரிசு பெற்ற கதை!

யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரண அவஸ்தையை அனுபவித்துக்கொண்டு இருந்தார். உடல் தளர்ந்துபோய் மூச்சுவிடவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரின் உயிர் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது.

சிலுவையின் அருகில் அன்னை மரியாளும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட சிலரும் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அவர்களின் முகங்கள் வேதனையால் வாடிப்போய், கண்ணீரால் நனைந்திருந்தது.

அவர்களிடமிருந்து சற்றே விலகி மறைவாய் நின்றுகொண்டு ஒரு இளைஞன் இயேசுவையே பார்த்து கொண்டிருந்தான்.

யார் அவன்? எதற்காக மறைந்து நிற்கிறான்?

இயேசு கிறிஸ்துவுக்கு பதிலாக அவன்தான் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும். அவன் பெயர் பாரபாஸ்.

மன்னரின் பிறந்தநாளன்று யாரேனும் ஒரு கைதியை விடுதலை செய்வது வழக்கம். அந்த வாய்ப்பு இம்முறை இயேசுவுக்கு வழங்கப்படும் என்று அவரின் நம்பிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிட்டது. திருடனும் கொலைகாரனுமான பாரபாஸ் விடுதலை செய்யப்பட்டான். அவனுக்கே தான் விடுதலை செய்யப்பட்டது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. எனினும், இயேசு நிச்சயமாக ஒரு குற்றவாளியாக இருக்க முடியாது என்று அவன் புரிந்துகொண்டான். அவரை சிலுவையில் அறையவேண்டும் என்ற சூழ்ச்சி திட்டத்தின் காரணமாகவே தான் விடுதலை செய்யப்பட்டிருக் கிறோம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.

பாவச்செயல்கள் செய்வதையே தொழிலாக கொண்டிருந்தவன் பாரபாஸ். இருந்தாலும், அவனும்கூட இயேசுவின் மரணத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளானான்.

பாரபாஸ் விடுதலையடைந்ததை அவனது நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினார்கள். பாரபாஸ் அதில் கலந்துகொண்டாலும் கொண்டாட்டத்தில் அவன் மனதில் மகிழ்ச்சியில்லை.
'யார் அந்த இயேசு கிறிஸ்து? எதற்காக அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவர் செய்த குற்றம்தான் என்ன?'

இப்படி பாரபாஸின் மனம் இயேசுவையே எண்ணிக்கொண்டிருந்தது.

ஜெருசலேம் நகரத்தில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தான். இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களை சந்தித்தான். 'இயேசு, தேவனின் குமாரன். மனிதர்கள் செய்த பாவங்களை தானே ஏற்றுக்கொண்டு தண்டனை அனுபவித்திருக்கிறார்' என்று அவர்கள் நம்பினர்.

பாரபாஸ் அதில் உண்மையிருப்பதாக ஒப்புக்கொண்டாலும் அவனால் முழுமையாக நம்ப முடியவில்லை. எனினும், மனிதர்கள் செய்யும் பாவச்செயல்களுக்கு மன்னிப்பு உண்டு என்று அவர்கள் நம்பியது பாரபாஸின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. தான் செய்த பாவங்களும் மன்னிக்கப்படும், அதன்பிறகு திருந்தி வாழ வேண்டும் என்று அவன் உறுதிகொண்டான்.

ஆனால், அதற்குள் பாரபாஸ் யார் என்பதை இயேசுவின் நம்பிக்கையாளர்கள் கண்டு கொண்டனர். தங்களது குருநாதர் சிலுவையில் அறையப்பட்டது அவனுக்கு பதிலாகத்தான் என்பதால் பாரபாஸின் மீது கோபம் கொண்டு அவனை விரட்டியடித்தனர்.

நகரத்தை விட்டு நீங்கிய பாரபாஸ், மீண்டும் தனது கூட்டத்தினருடன் சேர்ந்துகொண்டான். அவர்களுடன் சேர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டான். ஆனாலும் அதில் அவன் ஆர்வம் காட்டவில்லை. ஜெருசலேம் நகரத்தில் நடந்த சம்பவங்களையே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டிருந்தான். பாரபாஸின் கூட்டாளிகள் அவன் தங்களுடன் இருப்பதையே வெறுக்க ஆரம்பித்துவிட்டனர். அதை உணர்ந்துகொண்ட பாரபாஸ் திடீரென்று ஒருநாள் அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டான். அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யாருக்குமே தெரியவில்லை.

சுரங்கம் ஒன்றில் பாரபாஸ் அடிமையாகி விட்டான். அவனோடு சேர்த்து விலங்கிடப்பட்ட மற்றொரு அடிமையின் பெயர் ஸஹாக். அந்த அடிமை இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவனாய் இருந்தான். இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இயேவை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இன்னமும் கூட பாரபாஸிற்கு இயேசுவின் மீது முழு நம்பிக்கை வரவில்லை.

அவர்கள் இருவரும் இயேசுவைப்பற்றி பேசிக்கொள்வது உண்மைதானா என்று அரசரின் பிரதிநிதி விசாரித்தார். ஸஹாக் 'இயேசுவே என் கடவுள்' என ஒப்புக்கொண்டான். பாரபாஸோ 'எனக்கு முழு நம்பிக்கையில்லை' என்று உண்மையைக் கூறினான்.

இயேசுவை நம்புபவர்கள் அரசின் விரோதிகளாக கருதப்பட்டனர். எனவே ஸஹாக் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டான். பாரபாஸை அந்த அதிகாரி தன் வீட்டிலேயே அடிமையாக வைத்துக் கொண்டார்.
யாருடனும் பாரபாஸ் பேசுவதேயில்லை. அந்த அரச பிரதிநிதியின் வீட்டிலிருந்த அடிமை களிலும் சிலர் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அவர்கள்தான் காரணமென்று குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து பாரபாஸ¨ம் சிறை வைக்கப்பட்டான்.

அங்கிருந்தவர்களில் சிலர் 'இயேசு வுக்குப் பதிலாக சிலுவையிலிருந்து தப்பித்த பாரபாஸ் அவன்தான்' என்று அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களும் அவனை புறக்கணித்துவிட தனியாக ஒதுங்கி நின்றான்.

கடைசியில் அவர்கள் எல்லோரையுமே சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

முதல்தடவை பாரபாஸின் சிலுவையை இயேசு சுமந்தார். அவன் தப்பித்துக்கொண்டான். ஆனால் இப்போது அவன் சிலுவையை அவன்தானே சுமக்க வேண்டும்.

செய்யும் தவறுகளுக்கு தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி செய்த தவறுக்கு மனம் வருந்தி திருந்த முயற்சிப்பதுதான். திருந்திவாழ விருப்பமில்லாத பட்சத்தில் தண்டனையை அனுபவிக்க தயாராக இருக்கவேண்டியதுதான்.

'அன்பின் வழி' என்ற இந்த நாவலை எழுதியவர் ஸ்வீடிஷ் மொழி எழுத்தாளரான பேர்லாகர் குவிஸ்ட். இந்த நாவலுக்கு 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பேசும் புத்தகங்கள்!

நூலகம் அமைதியின் ஆலயம். ஆனால் இங்கு புத்தகங்களே மனிதர்களைப்போல் பேசினால்... ஆம், இந்த 'பேசும் நூலகம்' இந்தியாவிலேயே மும்பை மற்றும் மதுரையில்தான் உள்ளது. பார்வையற்றவர்களும் புத்தகம் படிக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற 2,600 பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள மதுரை நூலகத்தில், 1,600 புத்தகங்கள் 'குரல்வளக் கலைஞர்கள்' மூலம் படிக்கப்பட்டு அவை ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆறாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை நூல்கள் ஆடியோ வடிவில் கேசட்டுகளாக உள்ளன. படிப்பை மையமாகக் கொண்ட புத்தகங்கள் மட்டுமின்றி இதர புத்தகங்களும் உள்ளன. குறிப்புகள் எடுப்பதற்கும் உரிய வசதிகள் உள்ளன. நூலகத்தில் தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு... ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு ஆடியோ சிஸ்டமும் ஹெட்போனும் உள்ளது. பார்வை அற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகம் பதிவாகியிருக்கும் ஆடியோ கேசட்டுகளை எடுத்து சிஸ்டத்தில் போட்டுக் கொள்ளலாம். இப்படி புத்தகங்களை கேட்டுப் படித்தே எம்.எட் வரை 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்கள் அனைவருமே இப்போது ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

"புத்தகங்களை ஒலிப்பதிவு செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் ஓர் ஒலிப்பதிவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கண்தானம், இரத்ததானம், அன்னதானம் போல் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் புத்தகங்களை வாசிக்க அது அப்போதே ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கென அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதில்லை, இது குரல்தானம்" என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநர் நிக்கோலஸ் ஃபிரான்ஸிஸ். இந்நூலகத்துக்கு அஞ்சல்துறை இலவச பதிவுத்தபால் சேவையை அளித்திருக்கிறது.

"வைரமுத்து கவிதைகள், அப்துல்கலாமின் அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களை படிக்கணும்ங்கிறது என்னோட நீண்ட நாள் ஆசை. ஆனால் இவற்றையெல்லாம் படிக்க முடியாதோன்னு கவலைப்பட்டேன். பேசும் நூலகத்தால் இந்த ஆசை நிறைவேறியது" என்று மகிழ்கிறார் பார்வைத் திறனற்ற கல்லூரி மாணவி காளிதேவி.

ஓசையை உலகமாகக் கொண்டு வாழும் பார்வையற்றவர்களுக்கு இந்நூலகம் ஒரு வரப் பிரசாதம்.


படபடப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி

ðìð승‚° å¼ ºŸÁŠ¹œO!

‘‘â‚ú£‹ â¡ø£«ô, ‘àœ«÷¡ äò£’ â¡Á ðò‹, ªì¡û¡, ðìð승, èõ¬ô, ñù Ü¿ˆî‹ â™ô£‹ îõø£ñ™ Ýüó£AM´A¡øù. ñ£íõ˜èœ ñ†´I™ô£ñ™, ªðŸ«ø£˜èÀ‹ ã«î£ è«÷ «î˜¾ â¿îŠ«ð£Aøõ˜èœ ñ£FK ðîŸøñ£è ÝAM´Aø£˜èœ. Þîù£«ô«ò ¹ˆFê£L ñ£íõ˜èÀ‚°‹ Üõ˜èœ âF˜ð£˜ˆî Ü÷¾ êKò£èˆ «î˜¾ â¿î º®ò£ñ™ «ð£ŒM´Aø¶. Þ Þ¡«ø£´ å¼ ºŸÁŠ¹œO ¬õŠ«ð£‹. ªðŸ«ø£˜èO¡ êKò£ù ܵ°º¬ø, ñ£íõ˜èO¡ î¡ù‹H‚¬è ÞõŸ«ø£´ «î˜¾‚ è£ôˆF™ Yó£ù àí¾Š ðö‚躋 ªõŸP¬ò„ ²ôðñ£‚ °‹’’ â¡Aø£˜ ì£‚ì˜ º¼è¡. Þõ˜ °ö‰¬îèœ ñŸÁ‹ õ÷˜ Þ÷‹ð¼õˆ Fù¼‚è£ù CøŠ¹ ñ¼ˆ¶õ˜.

‘‘i†®™ A¬ì‚°‹ Ü¡ð£ù Üóõ¬íŠ¹, ð£¶è£Š¹ à혬õˆ  ñ£íõ˜èO¡ ñù Ü¿ˆîˆ¬î»‹ èõ¬ô¬ò»‹ °¬ø‚è à’’ âù‚ ÃÁ‹ ì£‚ì˜ º¼è¡, ðîŸø‹ Þ™ô£ñ™ «î˜¬õ âF˜ªè£œ÷ ñ£íõ˜èÀ‚° Þƒ«è Cô ®Šv î¼Aø£˜.

«î˜¾ â¿î„ ªê™½‹ º¡...

1. «î˜¾ ï¬ìªðÁ‹ èO™ 裬ôJ™ ªñ™L¬ê «è†èô£‹. Ü™ô¶, ªè£…ê Éó‹ è£ô£ø ï쉶M†´ õóô£‹. â‚ú£‹ ªì¡û¬ù‚ °¬ø‚è Þ¶ ï™ô õN!

2. «î˜¾ ï£÷¡Á ¹Fî£è â‰îªõ£¼ ð£ìˆ¬î»‹ ð®‚è ºòô «õ‡ì£‹.

3. «î˜¾ ï¬ìªðÁ‹ ý£½‚°„ ªê¡ø¶‹, ºî™  â¿Fò â‚ú£‹ ðŸP êè ñ£íõ˜èÀì¡ Mõ£F‚è£b˜èœ.

4. ‘ÜFè ñ£˜‚ â´‚è¬ô¡ù£ ÜŠð£, Ü‹ñ£, ÝCKò˜èœ, êè ñ£íõ˜èœ º¡ù£™ Üõñ£ùŠðì «ï¼‹; âF˜è£ô‹ ð£ö£°‹’ âù ÞŠ«ð£«î KꙆ¬ì G¬ùˆ¶Š ðò‰¶ ï´ƒ°õ¶, 𮂰‹ ñùG¬ô¬òŠ ð£F‚°‹. «î˜¾ â¡ð¶ Þ¶õ¬ó  èŸø¬î â¬ì «ð£†´Š 𣘂°‹ å¼ º¬ø. ܶ«õ ÞÁFò£ù¶ Ü™ô! Þ‰îˆ «î˜¾ º®¾ ï™ôð®ò£è õ‰î£™ ꉫî£û‹. Þ™¬ôªò¡ø£½‹, ÞF™ Üõñ£ùŠðì«õ£, âF˜è£ô‹ °Pˆ¶Š ðòŠðì«õ£ å¡Á«ñ Þ™¬ô. Þ¼‚è«õ Þ¼‚Aø¶ î÷ó£î ïñ¶ Ü´ˆî ºòŸC. ºòŸC à¬ìò£˜ Þ蛄C ܬìò£˜. âù«õ, «î˜¾ «ïóˆF™ ií£è KꙆ¬ì G¬ùˆ¶ ñù¬î‚ °öŠH‚ªè£œ÷£ b˜èœ.

5. ê£òƒè£ô‹ CÁ M¬÷ò£†´, Fò£ù‹ â¡Á ñù¬î Kô£‚v ªêŒ¶ªè£œÀƒèœ.

«î˜¾ ܬø‚°œ ªêŒò «õ‡®ò¬õ...

1. â‰î ܬøJ™ «î˜¾ â¿î «õ‡´‹, ⃫è àƒèœ Þ¼‚¬è Þ¼‚Aø¶ â¡ð¬îªò™ô£‹ ºî™ ÷ «ð£Œˆ ªîK‰¶ªè£œÀƒèœ. àƒèœ Þ¼‚¬èJ™ Üñ˜‰¶ «î˜¾ ⿶õ¶ «ð£™ èŸð¬ù ªêŒ¶ 𣼃èœ. Þ¶ ñùgFò£èŠ ðîŸøˆ¬î‚ °¬ø‚°‹.

2. «î˜¾ ܬø‚° º¡ù£™ ÜFè «ïó‹ 裈F¼Šð¬îˆ îM˜‚辋. êKò£ù «ï󈶂°„ ªê™õ«î ï™ô¶!

3. ð£ì‹ ðŸP«ò£, Mù£ˆî£œ ðŸP«ò£ ï‡ð˜èÀì¡ Mõ£F‚è£b˜èœ.

4. ‘ ï™ôº¬øJ™ «î˜¾‚°ˆ îò£ó£A»œ«÷¡; G„êò‹ ªõŸP ªðÁ«õ¡’ ñù¶‚°œ F¼‹ðˆ F¼‹ð„ ªê£™L‚ªè£œÀƒèœ. Þ‰î ²òï‹H‚¬èŠ ðJŸC ï™ô ðô¬ùˆ .

«î˜¾ Þ¼‚¬èJ™ à†è£˜‰î Hø°...

1. àƒèœ ÞìˆF™ õêFò£è„ ꣌‰¶ à†è£˜‰¶, Ýöñ£è å¼ º¬ø Í„¬ê Þ¿ˆ¶ M´ƒèœ. ñù¬î„ Yó£è ¬õˆ¶‚ªè£œÀƒèœ.

2. «ðù£, ªð¡C™, óŠð˜, õ¬ó èEî‚ è¼Mèœ «ð£¡ø-õŸ¬ø‚ ¬èò£÷ õêFò£è â´ˆ¶ ¬õˆ¶‚ªè£œÀƒèœ.

3. Mù£ˆî£œ ¬èJ™ A¬ìˆî¶‹, Üõêó Üõêó-ñ£èŠ ¹ó†®Š ð®‚è ºòô- «õ‡ì£‹. ªè£…ê‹ ªð£Á¬ñ-ò£è Þ¼ƒèœ. ñŸøõ˜èœ Mù£ˆî£œè¬÷Š ð®‚Aø£˜-è÷£ âù «õ®‚¬è 𣼃èœ. Cô Mï£®èœ ªð£Áˆ¶, Gî£ùñ£è àƒèœ Mù£ˆ-÷Š HKˆ¶Š 𮻃èœ.

4. Mù£ˆî£¬÷ º¿õ¶‹ èõùñ£èŠ ð®‚è 䉶 GIì‹ ªêôMìô£‹. ºîL™ MF-º¬øè¬÷Š 𮻃èœ. â‰î â‰î‚ «èœMèÀ‚° àƒèÀ‚° ï¡ø£èŠ ðF™ ªîK»«ñ£ ÜõŸ¬ø ®‚ ªêŒ¶ªè£œÀƒ-èœ. H¡ 嚪õ£¼ «èœM‚°‹ âˆî¬ù ñFŠªð‡èœ âùŠ 𣘈¶, Üˆ î‚èð® M¬ì ⿶õîŸè£ù «ïóˆ-¬îŠ HKˆ¶‚ªè£œÀƒèœ. è¬ìCò£è, â¿Fò M¬ì-è¬÷„ êK𣘂è ðˆ¶ GIìƒ-è¬÷ 嶂A‚ªè£œÀƒèœ.

5. «ïó‹ «ð£îM™¬ô â¡ø G¬ô õ‰î£™, Þó‡´ «èœMèÀ‚°„ ²¼‚èñ£è¾‹ ªîOõ£è¾‹ ⿶‹ M¬ìèÀ‚°‚ A¬ì‚°‹ ñ£˜‚, º¿¬ñò£è¾‹ MKõ£è¾‹ ⿶‹ å«ó å¼ M¬ì‚°‚ A¬ì‚°‹ ñ£˜‚¬èMì ÜFè‹ â¡ð¬î èõùˆF™ ªè£‡´ ªêò™ð´ƒèœ.

ªðŸ«ø£˜èÀ‚°...

1. «î˜¾ â¿î„ ªê™½‹ àƒèœ °ö‰¬îJì‹ ªð£Á¬ñJ¡¬ñ, ðìð승 «ð£¡ø ܬìò£÷ƒèœ ªî¡ð´Aøî£ âù èõQ»ƒèœ. ÜŠð® Þ¼‰î£™, ºîL™ Üõ˜èOì‹ ü£Lò£è, ꉫî£ûñ£è, ï‹H‚¬è  Mîñ£èŠ «ðC Üõ˜èO¡ ðîŸøˆ¬îˆ îE‚è ºò½ƒèœ.

2. Hœ¬÷èO¡ º¡ù£™, cƒèœ à현Cè¬÷‚ 膴Šð´ˆFŠ ªð£Á¬ñ«ò£´ Þ¼‚è «õ‡®ò¶ º‚Aò‹.

3. v«ì† çð˜v† õó «õ‡´‹, õ°ŠH«ô«ò ºî™ ñ£˜‚ â´‚è «õ‡´‹ ⡪ø™ô£‹ «î˜¾ «ïóˆF™ Ió†ì£b˜èœ.

4. °ö‰¬îèOì‹ àƒèÀ‚° àœ÷ Ü‚è¬ø¬ò, Ü¡¬ð Üõ˜èœ àí¼ñ£Á ªêŒ»ƒèœ. âF˜ñ¬øò£ù «ð„¬êˆ îM˜‚辋. Üõ˜èœ ð®‚è â´ˆ¶‚ªè£œÀ‹ ºòŸCè¬÷Š ð£ó£†´ƒèœ.

5. îò¾ªêŒ¶ ñŸø ñ£íõ˜è«÷£´ åŠH†´ ñ†ì‹ Š «ðê£b˜èœ.

6. àƒèœ °ö‰¬îèœ ãî£õ¶ ªê£™ô ºòŸC‚°‹«ð£¶, Ü¬îŠ ªð£Á¬ñò£è‚ 裶ªè£´ˆ¶‚ «èÀƒèœ. ⊫𣶋 ¹ˆFñF ªê£™L‚ªè£‡´ Þó£ñ™, Üõ˜èœ ªê£™½‹ ï™ô Mûòƒè¬÷ ãŸÁ‚ªè£œÀƒèœ. ܶ Üõ˜èÀ‚° ï‹H‚¬è¬òˆ .

7. «ðù£¾‚° Þƒ‚ «ð£†´‚ªè£œ÷ ñøŠð¶ «ð£¡Á °ö‰¬î ªêŒ»‹ CÁ CÁ îõÁèÀ‚° Üõ˜èœ e¶ âK‰¶ Mö£ñ™, àîM ªêŒ»ƒèœ.

ý£Œ vÇ졆v! ¬îKòñ£ Þ¼ƒè. î¡ù‹H‚¬è«ò£´ «î˜¾ ⿶ƒè. Ý™ F ªðv†!

மனப்பாடம் செய்வது எப்படி?

²ôðñ£è ñùŠð£ì‹ ªêŒõ¶ âŠð®?

ð£ìƒè¬÷Š ¹K‰¶ªè£‡´ ð®‚è «õ‡®ò¶ ÜõCò‹. Ü«î êñò‹, Cô ð£ìƒèO™ ñùŠð£ìˆ¶‚°‹ ªðK¶‹ º‚Aòˆ¶õ‹ à‡´. °PŠð£è, ªñ£NŠð£ìƒèO™ ñùŠð£ìŠ ð°Fè¬÷ õK Hêè£ñ™, îõÁ Þ™ô£ñ™ â¿Fù£™î£¡ º¿¬ñò£ù ñFŠªð‡èœ A¬ì‚°‹. èEî ňFóƒèœ, ÜPMò™ ç𣘺ô£‚èœ, õóô£ŸP™ º‚Aò Gè›¾èœ ïì‰î õ¼ìƒèœ «ð£¡ø¬õ»‹ ñùŠð£ì‹ ªêŒò «õ‡®ò¬õ«ò.

ñùŠð£ì‹ ªêŒõ Þ«î£ Cô ®Šv...

å¼ ð£ìˆ¬î å«ó «ïóˆF™ ªñ£ˆîñ£èŠ 𮂰‹«ð£¶, ܬùˆ¬î»‹ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œõ¶ Cóññ£è Þ¼‚°‹. âù«õ, Mù£ M¬ìè¬÷ ñ†´‹ îQ«ò â´ˆ¶ ¬õˆ¶‚ªè£‡´ ð®Šð¶ ï™ô¶. å«ó «ïóˆF™ 𮈶, õK Hêè£ñ™ ªê£™LM†ì£ ½‹, Þó‡ªì£¼ ï£O™ ñø‰¶M´‹ ꣈Fò‹ à‡´. âù«õ, ð®ˆî ð£ì‹ ñø‚è£ñ™ Þ¼‚è, ܬî ÜšõŠ«ð£¶ e‡´‹ e‡´‹ â´ˆ¶Š ð®Šð«î Cø‰î õN!

CPò ªêŒ»œ Ü™ô¶ CPò M¬ìè¬÷ å«ó Í„C™ 𮈶 º®ˆ¶Mìô£‹. ªðKò ªêŒ» ¬÷«ò£, ªðKò M¬ì¬ò«ò£ ªè£…ê‹ ªè£…êñ£èŠ ð®ˆî£™î£¡ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œ÷ º®»‹. ªðKò M¬ì-è¬÷ ºîL™ ð°F ð°Fò£èŠ 𮈶-M†´, H¡ù˜ º¿¬ñò£èŠ ð®ˆî£™ ï¡° ñùŠð£ì‹ Ý°‹.

 ð®ˆî¬î ñ e‡´‹ e‡´‹ ªê£™LŠ ð£˜‚è «õ‡´‹. ⃪胫è FíÁAø«î£ Ü‰îŠ ð°Fè¬÷ e‡´‹ 𮈶 åŠHˆ¶Š ðJŸC ªêŒòô£‹. ÜšõŠ«ð£¶ â¿FŠ 𣘈¶‹ ðJŸC ªêŒ-, M¬ìèœ ï¡° ñùF™ ðFõ-¶ì¡, «î˜M™ ñ÷ñ÷ªõ¡Á â¿F º®‚è º®»‹.

 𮂰‹ ð£ìƒèO™ àœ÷ Mûòƒ-èÀ‚°ˆ ªî£ì˜¹¬ìò ªð£¼-¬÷«ò£ Ü™ô¶ â‡è¬÷«ò£ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œõ¶ å¼ ï™ô º¬ø.

àî£ó툶‚°, õ£ùM™L¡ Gøƒè¬÷ G¬ùM™ ¬õˆ¶‚ªè£œ÷ VIBGYOR â¡Aø õ£˜ˆ¬î¬ò G¬ùM™ ¬õˆ¶‚ªè£‡-죫ô «ð£¶‹... õ£ùM™L¡ Gøƒè¬÷ ꆪì¡Á G¬ù¾‚°‚ ªè£‡´õ‰¶ Mìô£‹.

படிக்கும் மாணவர்களுக்கு..

«î˜¾ ü§óñ£? Þ«î£ Þ¼‚°¶ ñ¼‰¶!
«î˜¾ ü§ó‹ â¡ð¶ ²ñ£ó£èŠ 𮂰‹ ñ£íõ˜èÀ‚°ˆî£¡ â¡P™¬ô... Iè ï¡ø£èŠ 𮂰‹ ñ£íõ˜ èÀ‚°‚Ãì õ‰¶M´Aø¶. «èœMˆî£œ ²ôðñ£è Þ¼‚°ñ£, ð®ˆî ð£ìˆF L¼‰¶ «èœMèœ õ¼ñ£ âùˆ «î¬õ òŸø ðò‹ ãŸð´‹. êKò£èŠ ð®‚è£î ñ£íõ˜èÀ‚° ‘ð£v ªêŒ¶Mì º® »ñ£?’ â¡Á ðò‹; êó£êK ñ£íõ˜èÀ‚° ï™ô ñFŠªð‡ â´‚è º®»ñ£ â¡Á ðò‹; ï™ô ñFŠªð‡ õ£ƒ°‹ ñ£íõ˜èÀ‚° v«ì† ªôõ™ ñ£˜‚ â´‚è «õ‡´«ñ â¡ø ðîŸø‹. «î˜¾ ªï¼ƒè ªï¼ƒè, ÞŠð® Ý÷£À‚° å¼ Mî «î˜¾ ü§ó‹ Üùô®‚Aø¶. Þ¶ «î¬õòŸø¶. «î˜¾ â¡ð¶ â¡ù? cƒèœ ð®ˆî¬î„ «ê£Fˆ¶ ÜP»‹ å¼ Ü÷¾«è£™. Üšõ÷¾î£«ù? ÜŠð® J¼‚è, «î˜¬õ‚ 致 ðò‹ â?

è™M â¡ð¶ â¡ù?

¹Fò ¹Fò Mûòƒè¬÷ ÜP‰¶ ªè£œõ«î! ð®‚èŠ ð®‚è 嚪õ£¼ Mûòº‹, ‘Üì! ÞF™ Þˆî¬ù ¸µ‚è‹ Þ¼‚è£!’ â¡Aø MòŠ«ð£´‹ Ýõ«ô£´‹ ï‹ ñùF™ ðF»«ñò£ù£™, ܶ ²õ£óvòñ£ù ÜÂðõ‹ ÝAM´Aø¶. Üî¡H¡ 𮊹 ²ôðñ£AM´‹. ݘõˆ¶ì¡ 𮂰‹«ð£¶ êLŠ¹ ãŸð´õF™¬ô.

êK, ð®Šð¶ â¡ø£™ â¡ù?

â¬î»‹ ؉¶ èõQˆî™ (observation), ªî£ì˜¹ð´ˆ¶î™ (correlation), ªêò™ 𴈶î™(application) â¡ø Í¡Á ð® G¬ôè¬÷‚ ªè£‡ì«î 𮊹. ¹ˆîèˆF™ å¼ ð£ìˆ¬îŠ 𮂰‹«ð£¶, ܶ â¬îŠ ðŸP, â¡ù ÃÁAø¶ â¡ð¬îˆ ªîOõ£èŠ ¹K‰¶ ªè£‡´ èõùˆ¶ì¡ ð®Šð‹. 𮂰‹«ð£¶ ïñ‚°ˆ ªîKò õ¼‹ ¹Fò Mûòƒè¬÷, 㟪èù«õ ïñ‚°ˆ ªîK‰î Mûòƒè«÷£´ ªî£ì˜¹ð´ˆFŠ 𣘈¶Š ðK„êòŠð´ˆF‚ªè£œ÷ «õ‡´‹. Þ¶ ð®ˆî¬î G¬ùM™ GÁˆî à. ð®ˆî ð£ìƒè¬÷, êñò‹ A¬ì‚°‹«ð£ªî™ô£‹ ï¬ìº¬øJ™ ðò¡ð´ˆF‚ªè£‡´ Þ¼‚è «õ‡´‹. Þîù£™ èŸø¶ ñø‰¶Mì£ñ™ Þ¼‚°‹.

âOî£èŠ ð®Šð¶ âŠð®?

ð®Šð¶ â¡ð¶ ¹ˆîèƒè¬÷Š ð®ŠðFL¼‰¶ ªî£ìƒ°õF™¬ô. õ°Šð¬øJL¼‰¶ ªî£ìƒ°Aø¶. ð£ìŠ¹ˆîèˆF™ ÃøŠð†´œ÷ Mûòƒè¬÷ ÝCKò˜ ïñ‚°Š ¹K»‹ õ¬èJ™ M÷‚èñ£è„ ªê£™Lˆ î¼Aø£˜. ÜP‰î MûòƒèOL¼‰¶ 𮊠ð®ò£èŠ ðô ÜPò£î Mûòƒè¬÷ ïñ‚° ÜPºèŠ 𴈶Aø£˜. ïñ‚°Š ¹Kò£î Mûòƒè¬÷»‹ ÝCKòKì‹ «è†´ˆ ªîK‰¶ªè£œ÷ô£‹. âù«õ, õ°Šð¬øJ™ º¿ èõù‹ ªê½ˆ¶‹ ñ£íõ˜èÀ‚°Š ð£ìƒè¬÷Š ð®Šð¶ âOî£è Þ¼‚°‹.

õ°Šð¬øJ™ ð£ìƒè¬÷ á¡P‚ èõQŠð¶, ð£ìƒèOL¼‰¶ °PŠ¹ â´Šð¶, ð£ìƒè¬÷Š ð®Šð¶, ªîKò£î ð°Fè¬÷‚ °Pˆ¶¬õˆ¶‚ªè£‡´ ܬî ÝCKòKì«ñ£, ªè†®‚è£ó ñ£íõ˜èOì«ñ£ «è†´ˆ ªîK‰¶ªè£œõ¶ â¡ø õK¬êJ™ ïñ¶ ªêò™ð£´èœ ܬñò«õ‡´‹. å¼ ¹ˆî般î â´ˆî¾ì¡, ãî£õ¶ å¼ ð‚èˆ¬îŠ HKˆ¶ ¬õˆ¶‚ ªè£‡´ èìèìªõù ñùŠð£ì‹ ªêŒòˆ ªî£ìƒ° î™ êKò£ù º¬ø Þ™¬ô. ºîL™ ð®‚芫𣰋 ð£ì‹ º¿õ¬î»‹ MÁMÁªõù å¼ º¬ø «ñ«ô£†ìñ£è õ£C‚è «õ‡´‹. Þîù£™ ð£ì‹ â¬îŠ ðŸPò¶ â¡ð¶ M÷ƒ°‹. 㟪èù«õ Þ‰îŠ ð£ìˆ¬î õ°Šð¬øJ™ ÝCKò˜ ï숶‹«ð£¶ èõQˆF¼‰î£™, ܬî e‡´‹ ÞŠ«ð£¶ G¬ù¾‚°‚ ªè£‡´õ‰¶, ñÁð® å¼ º¬ø ð®‚è «õ‡´‹. ܊𮄠ªêŒî£™, âOî£èŠ ¹K»‹.

ð£ìˆ¬îŠ ð®ˆî Hø°, ÜFL¼‰¶ «èœMè¬÷ â¿ŠH ÜîŸè£ù ðF™è¬÷ ñ÷ñ÷ªõ¡Á â¿FŠ 𣘂è«õ‡´‹. ÜŠ«ð£¶î£¡, ï¡ø£èŠ ð®ˆF¼‰î «ð£F½‹, 𣘂è£ñ™ ⿶‹«ð£¶ â‰î ÞìˆF™ ÞìÁAø¶ â¡ð¶ ïñ‚°Š ¹K»‹.

â‰î «ïóˆF™ ð®Šð¶ ï™ô¶?

ð®Šð Þ캋 «ïóº‹ Iè º‚Aò‹. Cô ¹ˆFê£L ñ£íõ˜èœ 𣆴‚ «è†´‚ªè£‡«ì ð®Šðî£è‚ ÃÁõ£˜èœ. Cô˜ ܬñFò£ù Å› G¬ôJ™ ð®ˆî£™î£¡ ñ‡¬ì‚°œ ãÁAø¶ â¡ð£˜èœ. ªð£¶õ£è å¼ «ïóˆF™ å¼ ªêò¬ôˆ  ªêŒò º®»‹. Þó‡´ «õ¬ôè¬÷„ ªêŒ»‹«ð£¶, âF™ ïñ‚° ߴ𣴠޼‚Aø«î£ ÜF™ ï‹ èõù‹ F¼‹H, ñŸøF™ °¬ø»‹. âù«õ, ð£ìƒè¬÷ ܬñFò£ù Å›G¬ôJ™, îQ¬ñJ™ ð®Šð«î ï™ô¶.

ðèL™ i†´‚° M¼‰Fù˜èœ, ªõOò£†èœ õ‰¶ «ð£õ£˜èœ. å«ó êˆîñ£è Þ¼‚°‹. ñ£íõ˜èœ ð®ŠH™ èõù‹ ªê½ˆîº®ò£¶. âù«õ, ÜF裬ôJ™ i†®™ ܬñFò£ù Å›G¬ôJ™ ð®Šð¶ ï™ô¶. ñŸøð®, â‰î å¼ ¹ø„ Å›G¬ô»‹ ñ ð£F‚è£î MîˆF™ ð£ìˆF™ ï‹ èõùˆ¬î 强èŠð´ˆFŠ ð®‚èŠ ðöè «õ‡´‹. å¼ è¬îŠ ¹ˆî般î Ýõ«ô£´ õ£Cˆî£™, ¹ø„Åö™ ï‹ C‰î¬ù¬ò‚ è¬ô‚Aøî£ âù «ò£C»ƒèœ.

ï™ô ªõO„ê‹ àœ÷ ÞìˆF™ à†è£˜‰¶ 𮻃èœ. 𮂰‹«ð£¶ Þ¬ìJ™ «ê£˜õ£è Þ¼‰î£™, êŸÁ Þ¬ìªõO M†´, ⿉¶ å¼ õ£‚ «ð£ŒM†´ õ‰¶ ð®Šð¬îˆ ªî£ìóô£‹. 嚪õ£¼õ¼‹ 𮂰‹ «ïó‹ ñ£Áð´‹. Cô˜ ÜF裬ôJ™ ⿉¶ ð®Šð£˜èœ. Cô¼‚° ñ£¬ô «ïóˆ -F™ ð®Šð¶ àè‰îî£è Þ¼‚°‹. Cô˜ ïœOó¬õ»‹ ® 𮈶‚ ªè£‡´ Þ¼Šð£˜èœ.  º¿ õ¶‹ ÞòƒA‚ ªè£‡´ Þ¼Šð , ÞóM™ «ïó‹ ªê™ô„ ªê™ô 蟰‹ Fø¡ °¬øõ«î£´, ñÁ  ðEè¬÷„ ªêŒõF½‹ «ê£˜¾ ãŸð´‹. âù«õ, ÞóM™ ªó£‹ð «ïó‹ MNˆF¼‚è£ñ™, Y‚Aó«ñ 𮊬𠺮ˆ¶M†´Š 𴈶ˆ ɃAM´õ¶ ï™ô¶. ɃA ⿉ CP¶ «ïó‹ è£ô£ø ï쉶, É‚è‹ ï¡° è¬ô‰î H¡¹ Üñ˜‰¶ ð®‚èˆ ªî£ìƒAù£™, ð£ìƒèœ ñùF™ ï¡° ðF»‹. è£óí‹, Ü‰î «ïóˆF™ ͬ÷ ¹ˆ¶í˜„Cò£è Þ¼‚°‹.

ð®Šð¬î„ ²¬ñò£è‚ è¼î£ñ™, ²õ£óvòñ£‚A‚ ªè£œÀƒèœ. «î¬õò£ù ð£ìŠ ¹ˆîèƒèœ, °PŠ¹èœ «ð£¡øõŸ¬ø 心°ð´ˆF ð®ŠðèŸø õ¬èJ™ å«ó ÞìˆF™ ¬õˆF ¼ƒèœ. ¹ˆîèƒè¬÷«ò£, «ï£†v è¬÷«ò£ ªî£¬ôˆ¶M†´ Ü®‚è® i‡ðîŸøˆ¶‚° Ý÷£è£b˜èœ.

î¡ù‹H‚¬è«ò£´ è÷‹ Þøƒ°ƒèœ. ñù¶ì¡ àì¬ô»‹ «î˜¾‚°ˆ îò£ó£è àÁF«ò£´‹ º¿ Ý«ó£‚Aòˆ«î£´‹ ¬õˆ¶‚ªè£œ÷ «õ‡®ò¶ ÜõCò‹.

F†ìIì™, Mì£ ºòŸC, è´‹ à¬öŠ¹ Í¡Á‹ Þ¼‰î£™, ªõŸP àƒèœ ¬èJ™! ÜŠ¹ø‹ «î˜¾ ü§ó ñ£õ¶ å‡í£õ¶?!

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்தியர்

  • டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் இந்திய வீரர் கே.எஸ்.ரஞ்சித்சிங். இவர் இங்கிலாந்து அணிக்காக 1896 முதல் 1902 ம் ஆண்டு வரை விளையாடினார்.
  • குல் முகமது, அமிர் இலாஹி, அப்துல் கர்தார் ஆகிய மூன்று வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்காக விளையாடியுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும், பின்னரும் விளையாடியதால் இரு அணிகளிலுமே இடம் பெற்றிருந்தனர்.
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் தமது முதல் வெற்றியை பதிவு செய்ய, இந்தியா 19 வருடங்களையும், 230 நாட்களையும் எடுத்துக்கொண்டது.

ஒலிம்பிக்ஸ் சின்னம் உருவானது எப்படி?


  • ஒலிம்பிக்ஸ் சின்னமான ஐந்து வளையங்கள், ஐந்து கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நட்பால் பிணைக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
  • 1960 ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டன.
  • ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க காலத்தில் கிரேக்கத்தின் ஜியுஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடத்தப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
  • புகழ்பெற்ற ஒலிம்பிக்ஸ் ஜோதியின் எடை 3 பவுண்ட்கள்.
  • முதன் முதலாக நடத்தப்பட்ட ஒலிம்பிக்ஸில், நடந்து செல்லும் போட்டி மட்டும் தான் இடம் பெற்றிருந்தது.
  • 1896ம் ஆண்டு நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கியதில் இருந்து அனைத்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரிட்டன், கிரீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றன.

நீச்சல் போட்டி சாதனை

  • 2008 ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ள அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ், இதுவரை நீச்சலில் 32 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
  • லைஃப் ஜாக்கெட் போன்ற எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, ஆங்கிலக் கால்வயை முதன்முதலில் கடந்தவர் கேப்டன் மேத்யூ வெப். நயகரா நீர்வீழ்ச்சிக்கு அடியில் எதிர்நீச்சல் அடிக்க முயற்சிக்கும் போது இறந்தார்.
  • ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்த முதல் இந்தியர் மிஹிர் சென்
  • கிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்த, காது கேளாத, வாய் பேசாத முதல் நபர் தாராநாத் ஷெனாய்
  • 1948 ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியின் அனைத்து பிரிவுகளிலும், அமெரிக்கா வெற்றி பெற்று சாதனை படைத்தது.


கிரிக்கெட்

20, 20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என கிரிக்கெட்டின் அனைத்து பிரிவுகளிலும் சதம் அடித்த ஒரே வீரர், மேற்க்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில்.

இங்கிலாந்துக்கும் மேற்க்கிந்திய தீவுகளுக்கும் நடந்த ஒரு போட்டியில், எல்லைக் கோட்டில் இருந்து வீசிய பந்து, ஒரு பக்க ஸ்டம்புகளை அடித்து அதே வேகத்தில் சென்று மறு பக்க ஸ்டம்புகளையும் அடித்தது. கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு நடந்தது ஒரே ஒரு முறை மட்டுமே.

பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா ஒரு முறை பேட்டிங் செய்யும் போது, நோ பால் பந்தில் கேட்ச் கொடுத்தார். அம்பயர் கூறிய நோ பால் அறிவிப்பை சரியாக கவனிக்காமல் பெவிலியன் திரும்பிவிட்டார். இறுதியில் அவர் ரன் அவுட் ஆனதாக ஸ்கொயர் லெக் அம்பயர் அறிவித்து விட்டார்.

டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர் சர் டான் ப்ராட்மேன். இங்கிலாந்திற்க்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் அவர் எடுத்த ரன்கள் 309.

முதன் முதலாக ஹெல்மெட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீரர் வர்கிரஹாம் யெல்லோப்.

கிரிக்கெட்டில் இது வரை மாறாத ஒரே விதி, கிரிக்கெட் பிட்சின் அளவு மட்டுமே!

வெள்ளை யானையின் சக்தி


மகத நாட்டை விரூபசேனன் ஆண்ட போது போதிசத்வர் ஒரு யானையாகப் பிறந்தார். அந்த யானை தேவலோக யானை ஐராவதம் போல வெள்ளையாக இருந்தது. அதனால் மகத மன்னன் தன் பட்டத்து யானையாக அதனை வைத்துக் கொண்டான். ஒருமுறை ஏதோ ஒரு விழா நடக்க மகத நாடே தேவலோகம் போல அலங்கரிக்கப்பட்டது. தலைநகரில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடக்க ஏற்பாடாகியது. அதற்காகப் பட்டத்து யானை நன்கு அலங்கரிக்கப்பட்டது. வீரர்கள் யானையின் முன்னும் பின்னுமாக நடக்க, மகத மன்னன் அதன் மீது கம்பீரமாக அமர்ந்து சென்றான்.

வழி நெடுக்க மக்கள் கூடி “ஆகா! அந்த யானைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்ன நடை! என்ன கம்பீரப் பார்வை!!” என்று அந்தப் பட்டத்து யானையைப் புகழ்ந்தார்கள்.
இப்படி யானையை மக்கள் புகழ்வது மன்னனுக்குப் பிடிக்கவில்லை. அவன் தன் மனதில் ‘நான் அரசன். எனக்கு இவர்கள் மரியாதை அளிக்காமல் இந்த யானைக்கு அளித்து அதனைப் புகழ்கிறார்களே. இந்த யானையை ஒழித்தால் தான் இவர்கள் என்னைப் புகழ்வார்கள்’ என்று தீர்மானித்துக் கொண்டான்.


அவன் யானைப்பாகனை அழைத்து “இந்தப் பட்டத்து யானை நன்கு பழக்கப்பட்டதுதானா?” என்று கேட்டான். அவனும் “இதனைப் பழக்கி இதன் மீது அம்பாரியை வைத்தவன் நானே” என்றான். மன்னரோ “இந்த யானை கட்டுக்கு அடங்காமல் இருக்கும் போலிருக்கிறது. இது நன்கு பழக்கப்பட்ட யானை என்பதில் எனக்குச் சந்தேகமே” என்றான். யானைப் பாகனும் “அப்படி எல்லாம் இல்லை” எனவே மன்னனும் “அப்படியானால் இதனைப் பரீட்சித்துப் பார்க்கலாம். உன்னால் இதை அந்த உயரமான மலை மீது ஏறச் செய்ய முடியுமா?” என்று கேட்டான்.

யானைப்பாகனும் “ஓ! முடியும்” என்று கூறி யானையை அம்மலை மீது போகவும் செய்து விட்டான். அரசனும் தன் சில ஆட்களோடு அந்த மலையின் உச்சிக்குப் போனான். ஓரிடத்தில் செங்குத்தான பாறையும் மேலே மிகச் சிறிய இடம் சமதளமாகவும் இருந்தது. மன்னன் யானையை அங்கே நிறுத்தச் சொல்லி யானைப் பாகனிடம் “எங்கே இதனை அந்த இடத்தில் மூன்று காலால் நிற்கச் செய் பார்க்கலாம்” என்றான். யானைப் பாகனும் யானையிடம் அவ்வாறு செய்யும்படிக் கூறவே அதுவும் அவ்வாறே செய்தது.


யானைப்பாகனிடம் “சரி, அதனை இப்போது அதன் இரு பின் கால்களால் நிற்கச் சொல்” என்றான். யானைப்பாகனும் யானையிடம் அரசனின் கட்டளையைக் கூறவே அதுவும் தன் பின் கால்கள் இரண்டால் மட்டும் நின்று காட்டியது. அடுத்து மன்னன் யானையை முன் கால்கள் இரண்டால் மட்டும் நிற்க வைக்கச் சொல்லவே, யானைப் பாகனும் சற்றுத் திகைத்து அரசனின் கட்டளையைக் கூறினான்.

யானையும் அந்த அபாயகரமான இடத்தில் தன் முன்னங்கால்கள் இரண்டால் நின்றது. இதைக் கண்ட யாவரும் ‘ஆகா’ என வியந்து யானையைப் பாராட்டினார்கள். மன்னனுக்கோ ஒரே எரிச்சல். அவன் யானைப்பாகனிடம் “சரி. இப்போது அதை ஒற்றைக் காலால் நிற்கச் சொல்” என்றான். யானைப்பாகனுக்கு மன்னன் மனதில் என்ன நினைக்கிறான் என்பது தெரிந்து விட்டது.

யானையிடம் அரசனின் அந்தக் கட்டளையைக் கூறவே, யானையும் ஒற்றைக்காலால் நின்றது. அது கண்டு மன்னன் “இதெல்லாம் எந்த சாதாரண யானையும் செய்யும். ஆனால் இது தரையில் நடப்பது போல ஆகாயத்தில் நடக்க முடியுமா? அங்கே நடக்கச் சொல் பார்க்கலாம்” என்றான். யானைப்பாகனுக்கு அப்போது மன்னன் யானையைக் கொல்லவே விரும்புகிறான் என்பது உறுதியாகி விட்டது.

அவன் யானையிடம் அரசனின் கட்டளையைக் கூறி “உன் மதிப்பை அறியாத மூடன் இந்த மன்னன். நீ உன் மகத்தான சக்தியால் இவன் விரும்புவது போல ஆகாயத்தில் உயரக் கிளம்பி நடந்து காட்டு” என்றான். யானையும் கம்பீரமாக அந்த மலை உச்சி மீது நடந்து அங்கிருந்து ஆகாயத்திலும் தரை மீது நடப்பது போலவே நடந்து போகலாயிற்று.


அப்போது யானைப்பாகன் “மன்னனே! நீ இந்த யானையை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று முயன்றாய். ஆனால் இதன் மகத்தான சக்தியை அறியாத நீ அதனிடம் தோற்றுப் போனாய். அந்த யானை உன்னிடம் இருக்க தகுந்ததே அல்ல. வேறு நல்ல இடத்தில் இருக்க வேண்டியது. நீ இனி அதனை அடைய முடியாது. நானும் அந்த யானை செல்லும் இடத்திற்கே போகிறேன்” எனக் கூறிக் கிளம்பிப் போய் விட்டான்.


ஆகாயத்தில் நடந்து சென்ற யானை காசி நகரை அடைந்தது. அந்த நகர மக்கள் ஒரு யானை வான வீதியில் நடந்து வந்து தம் நகரில் இறங்குவதைக் கண்டனர். ஒரே உற்சாகத்துடன் அதனை அவர்கள் வரவேற்றார்கள். காசி மன்னனும் அந்த யானை முன் போய் கைகூப்பி நின்று “கஜராஜனே! வருக! வருக!! உம் வரவால் என் நாடே செழிப்புற்று சுகவாழ்வு பெறப் போகிறது” என்றான்.


இதே சமயம் அந்த யானையை மகத மன்னனிடம் இருந்து ஓட்டிய யானைப்பாகனும் வந்து சேர்ந்தான். அவன் காசி மன்னனிடம் யானையுடனும், அவனிடமும் மகத மன்னன் எவ்வாறு நடந்து கொண்டான் என்று நடந்த அனைத்தையும் கூறி அந்த யானையின் மகத்துவத்தை எடுத்துஉரைத்தான். காசி மன்னனும் அது போதிசத்வர் என அறிந்து தன் நாட்டை மூன்று பாகங்களாக்கி ஒரு பாகத்தை அந்த யானையின் ஆட்சியிலும் மற்றதை யானைப்பாகனின் ஆட்சியிலும் மூன்றாவது பகுதியைத் தானுமாக ஆட்சி புரிந்து வர ஏற்பாடு செய்தான். காசி நாடும் அந்த யானை வந்ததில் இருந்து சுகவாழ்வு பெற்றது.

கார்த்திக் ஷரன்


வணக்கம்!