வீட்டிற்குப் போ!
Saturday, July 31, 2010 at 9:53 AM {0 comments}
குருவை மதிக்காவிட்டால்...
at 9:50 AM {0 comments}
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் செருப்புத் தைக்கும் குடும்பத்தில் ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தார். அவர் பெரியவராகித் தன் குலத்தொழிலைச் செய்து ஒரு சித்த யோகியை அணுகி அவரிடமிருந்து ஒரு அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டார்.
அந்த மந்திரத்தைக் கொண்டு காய் காய்க்காத காலத்தில் கூட மாமரங்களில் மாம்பழங்களை வர வழைத்து அவற்றை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் காட்டிற்குப் போய் ஒரு மாமரத்தின் அருகே நின்று மந்திரம் ஓதியவாறே அவர் அதன் மீது நீரைத் தெளிக்க, அம்மரம் பழங்களாகக் கீழே உதிர்த்து விழச் செய்யும். இவ்வாறு போதிசத்வர் செய்வதை ஒருநாள் சுநிந்தன் என்ற அந்தண வாலிபன் பார்த்து விட்டான்.
அவன் எந்த வேலையும் செய்யாமல் தனக்குப் பணம் வந்து குவிந்து விட வேண்டும் என்று பகல் கனவு காண்பவன். அவன் போதிசத்வர் செய்த அற்புதத்தைக் கண்டதும் அவரிடம் இருந்து அந்த அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விடுவது என அவன் தீர்மானித்து, அப்போது முதல் போதிசத்வருக்குப் பணிவிடைகள் செய்யலானான். கீழே விழுந்த பழங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு அவர் பின் நடந்து அவர் வீட்டில் கொண்டு போய் இறக்கினான். அவருடைய வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்தான்.
இதைக் கண்ட போதிசத்வர் தன் மனைவியிடம் “இவன் ஏன் இப்படி நமக்கு வேலை செய்கிறான் தெரியுமா? என்னிடமிருந்து அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொள்ளத் தான். இவன் அதனைக் கற்றுக் கொண்டாலும் வெகு சீக்கிரமே அதன் சக்தி இவனிடம் இல்லாமல் போய் விடும்” என்றார். அவரது மனைவி, “பாவம்! எப்படி மாடு போல நம் வீட்டில் உழைக்கிறான்! நீங்கள் அவனுக்கு மந்திரத்தை உபதேசித்து விடுங்கள். பலிப்பதும் பலிக்காததும் அவனவன் தலை எழுத்தைப் பொறுத்தது” என்றாள்.
போதிசத்வரும் தம் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சுநிந்தனுக்கு அந்த அபூர்வ மந்திரத்தை உபதேசித்து “நீ இதனை யாரிடமிருந்து கற்றாய் என்ற ரகசியத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் மறுவினாடியே உனக்கு இந்த மந்திரம் பலிக்காது” என்றார்.
சுநிந்தனும் யாரிடமும் அந்த ரகசியத்தைக் கூறுவதில்லை என உறுதிமொழி அளித்து போதிசத்வரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் தினமும் நிறைய மாம்பழங்களை மரங்களில் தான் உபதேசம் பெற்ற மந்திரத்தின் சக்தியால் வரவழைத்து அவற்றை விற்று, நிறைய பணம் அடைந்து வரலானான்.
இவ்வாறு சுநிந்தன் வரவழைத்து விற்ற மாம்பழங்களில் ஒன்று காசி மன்னனுக்குக் கிடைத்தது. அவன் மாம்பழக் காலமில்லாத காலத்தில் மிகப் பெரிய ருசியான மாம்பழம் கிடைத்தது கண்டு ஆச்சரியப்பட்டான். அத்தகைய பழம் எங்கே கிடைத்தது என விசாரிக்கலானான். சுநிந்தன் தான் அதனை விற்றவன் என்பதை அவன் தன் ஆட்களிடம்இருந்து தெரிந்து கொண்டான்.
அவன் உடனே சுநிந்தனை அழைத்து விசாரிக்கவே சுநிந்தனும் “என்னிடம் அபூர்வ மந்திரசக்தி உள்ளது. அதனால் இத்தகைய பழங்களை வரவழைக்கிறேன்” என்று ஜம்பம் அடித்துக் கூறினான். அரசனும் அந்த சக்தியைக் காண விரும்பவே சுநிந்தனும் பலர் முன்னிலையில் அரசனின் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தின் முன்போய் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரித்தான். மறு வினாடியே அம்மரத்தில் மாம்பழங்கள் தோன்றி கீழே விழுந்தன.
இந்த அதிசயத்தைக் கண்டு காசி மன்னன் ஆச்சரியப்பட்டு “ஆகா! இந்த அற்புத மந்திரத்தை உனக்கு உபதேசித்த மகான் யார்? உடனே சொல்” என்று கேட்டான்.சுநிந்தன் முதலில் தான் அதனைக் கற்றது போதிசத்வரிடமிருந்து எனச் சொல்ல வேண்டாம் என நினைத்தான். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் கேட்கவே, சுநிந்தனும் போதிசத்வர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் தான் அந்த மந்திரத்தைக் கற்றது செருப்பு தைக்கும் குலத்தில் பிறந்த போதிசத்வரிடமிருந்து என்று கூறி விட்டான்.
இவ்வளவு சிரமப்பட்டு கற்ற மந்திரத்தின் சக்தி திடீரென்று தன்னை விட்டு விட்டுப் போய் விடவா போகிறது என அவன் எண்ணித் தன் குருவின் கட்டளையையும் மீறி ரகசியத்தை வெளியிட்டு விட்டான். காசி மன்னன் ஆச்சரியப்பட்டவாறே “அடேயப்பா! தாழ்குலத்தில் பிறந்த ஒருவனுக்கா இவ்வளவு சக்தி! பிராமணனாகிய நீ அவனிடம் உபதேசம் பெற்றது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லையா?” என்று கேட்டான். சுநிந்தனும் பதில் எதுவும் கூறாமல் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றான்.
ஓரிரண்டு மாதங்களாயின காசி மன்னனுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் சுநிந்தனை அழைத்து வரச் சொன்னான். சுநிந்தன் வந்ததும் காசி மன்னன் அவனிடம் மந்திரத்தை உச்சரித்து முன் செய்தது போல இப்போதும் தனக்கு மாம்பழங்கள் வரவழைத்துக் கொடுக்கும்படிக் கூறினான். சுநிந்தனும் மிகவும் கர்வத்தோடு முன் போல அரசனின் தோட்டத்திற்குப் போனான். அவனோடு காசி மன்னனும் மற்றும் பலரும் சென்றார்கள்.
சுநிந்தனும் ஒரு மாமரத்தின் முன் நின்று அதன் மீது நீரைத் தெளித்து, மந்திரத்தை உச்சரிக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மந்திரமே ஞாபகத்திற்கு வரவில்லை. காசி மன்னனும் மற்றவர்களும் அது கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அப்போது சுநிந்தன் “நான் என் குருவின் கட்டளையை மீறினேன். நான் யாரிடமிருந்து இந்த மந்திரத்தைக் கற்றேன் என்ற ரகசியத்தைக் காசி மன்னனிடம் கூறினேன். அதனால் எனக்கு அப்போது முதல் மந்திரம் பலிக்காது போயிற்று” என்று எல்லாரிடமும் கூறி விட்டு தலைகுனிந்தவாறே தன் வீட்டிற்குச் சென்றான். குருவை மதிக்காததாலும், கர்வம் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவை எண்ணி, அவன் வாழ்நாள் முழுதும் வருந்தினான்.
கோட்டை நாய்கள்
at 9:48 AM {0 comments}
சற்று நேரத்திற்கெல்லாம் வெளியே வந்த மன்னன் தன் குதிரையின் கடிவாளங்கள் கடிக்கப் பட்டிருப்பதையும் சற்று தூரத்தில் சில நாய்கள் ஓடிக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் விலையுயர்ந்த கடிவாளங்கள் நாசமாக்கப்பட்டது கண்டு அவன் கோபம் கொண்டு நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படித் தன் வீரர்களுக்குக் கட்டளை இட்டான்.
வீரர்களும் நாட்டில் தெருவில் கண்ட நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லலானார்கள். நாய்கள் எல்லாம் பயந்து ஓடிப் போய்த் தம் தலைவராக நாய் உருவில் இருந்த போதிசத்வரிடம் போய் அரசனின் கட்டளையைக் கூறிப் பல நாய்கள் இறந்து போனதையும் கூறின.
போதிசத்வரும் "நான் இப்போதே அரச சபைக்குப் போய் அரசனுக்கு நல்லது கூறி இந்த உத்தரவை ரத்து செய்து நியாயம் வழங்கச் சொல்கிறேன்" எனக் கூறி விட்டு அரச சபைக்குச் சென்றார். அங்கு அவர் அரண்மனைக்குள் நுழைந்து எப்படியோ தர்பார் மண்டபத்திற்குள் போனார். பிறகு அவர் அங்கு அரசன் சிம்மாசனத்தின் அடியே புகுந்து வந்து அரசனின் முன் நின்றார்.
போதிசத்வரான நாயும் "அரசே, நாட்டிலுள்ள நாய்களை எல்லாம் அடித்துக் கொல்லும்படி உத்தரவு போட்டிருக்கிறீர்களே. இது எதற்காக?" என்று கேட்டது. அரசனும் "அவை என் தேர்க் குதிரைகளின் கடிவாளங்களைத் கடித்து அந்தத் தோலைத் தின்று விட்டன. விலை உயர்ந்த கடிவாளங்கள் நாசமாகி விட்டன. இதுதான் நாய்களின் குற்றம்" என்றான்.
அப்போது போதிசத்வர் "அந்தக் கடிவாளங்களை கடித்தது எந்த நாய்கள் என்று தெரியுமா?" என்று கேட்க அரசனும் "தெரியாது" என்றான். அப்போது போதிசத்வர் 'அரசே! குற்றம் செய்தவன் யார் என்று கூடத் தெரியாமல் மொத்தமாக எல்லோரையும் தண்டிப்பது நியாயமா? உங்கள் வீரர்கள் இந்த நாட்டில் உள்ள எல்லா நாய்களையும் அடித்துக் கொல்லப் போகிறார்களா?"என்றுகேட்டார்.அரசனும் "நாட்டிலுள்ள, நாய்களை எல்லாம் கொல்லும்படி உத்தரவு போட்டேன். கோட்டைக்குள் நான் வளர்க்கும் நாய்களுக்கு இந்த உத்தரவுஇல்லை "என்றான். போதிசத்வரும் "உங்களுக்குக் குற்றம் புரிந்த நாய்கள் எவை என்பது தெரியாது. ஆனால் கோட்டைக்குள் இருக்கும் நாய்களை ஒன்றும் செய்யக் கூடாது என்கிறீர்கள். இது பாரபட்சம் காட்டுவதாகும். வெறுப்பு கொண்ட அறிவற்ற செயலாகும். ஒரு அரசனிடம் ஒருவருக்கு ஒரு நீதி மற்றொருவருக்கு இன்னொரு நீதி என்று இத்தகைய குணங்கள் இருக்கக் கூடாது," என்றார்.
அது கேட்டு அரசன் சற்று யோசித்து "அப்படியானால் என் விலையுயர்ந்த கடிவாளங்களைக் கடித்த நாய்கள் எவை என்று நீ கண்டுபிடி. அவைகளை தண்டிக்கிறேன். மற்ற நாய்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்" என்றான்.
போதிசத்வரும் "இந்தக் குற்றத்தை செய்தது உங்கள் கோட்டை நாய்கள். அதை நான் நிரூபித்துக் காட்டுகிறேன்" என்றார் "அப்படி செய்தால் என் உத்தரவை உடனே ரத்து செய்கிறேன்" என அரசன் கூறினான்.
சற்று நேரத்திற்கெல்லாம் அந்த நாய்கள் வாந்தி எடுத்தன. அவை எடுத்த வாந்தியில் அவை கடித்துத் தின்று இன்னமும் ஜீரணமாகாத கடிவாளத்தோல் துண்டுகள் வெளியே வந்து விழுந்தன.
அதைக் கண்ட அரசன் ஆச்சரியப் பட்டு நிற்கவே போதிசத்வரும் "அரசே அரண்மனைப் பணியாட்கள் உங்கள் கோட்டை நாய்களுக்கு சரியான உணவு கொடுப்பதில்லை. உணவுக்காகப் பணம் வாங்கிக் கொண்டு அதில் பெரும் பகுதியை அமுக்கிக் கொண்டு விடுகிறார்கள். அதனால் பசியால் இந்தக் கோட்டை நாய்கள் வாடுகின்றன. நீங்கள் இதை சரி செய்யுங்கள்" என்றார்.அரசனுக்கு நாய் வடிவில் போதி சத்வரே வந்திருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. அவன் போதி சத்வர் உபதேசித்த அறிவரைகளைக் கவனமாகக் கேட்டான்.
கோட்டைக்குள் நாய்களுக்கு உணவு கொடுக்கப் பொறுப்பேற்றவர்களை விசாரித்து அவர்கள் குற்றவாளிகளே எனக் கண்டு அவர்களை வேலையிலிருந்து நீக்கிக்கடுமையாக தண்டித்தான்.
அந்த நாய்களை வளர்க்கும் பணிக்கு புதியவர்களை நியமித்தான். அவன் அவர்களிடம் "நீங்கள் இந்த நாய்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வரவேண்டும். தெரிந்ததா?" என்றும் கூறினான்.
அது மட்டுமல்ல, நாட்டிலுள்ள நாய்களுக்கும் உணவு அளிக்க ஏற்பாடு செய்தான் அந்த அரசன். இவ்வாறு போதிசத்வரின் நற்போதனைகளால் அரசனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் நல்வாழ்வு கிடைத்தது.
கனவுகளின் பொருள்
at 9:42 AM {0 comments}
யானைப்பாக மன்னன்
at 9:38 AM {0 comments}
ராட்சஸனை அறிவால் வீழ்த்திய சிறுவன்
at 9:36 AM {0 comments}
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் அரச குமாரனாகப் பிறந்தார். அவரது பெயர்சூட்டு விழாவின் போது பல நாடுகளிலிருந்தும் சோதிடர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மன்னனிடம் "அரசே! இந்தச் சிறுவனின் ஜாதகம் மிகமிகச் சிறந்தது. இவன் ஐந்து வித ஆயுதங்களைக் கொண்டு உலகம் முழுவதையுமே வென்று பராக்கிரமசாலியாகத் திகழ்வான்" எனக் கூறி அக்குழந்தைக்கு பஞ்சாயுதன் என்ற பெயரையும் சூட்டினார்கள்.
சில வருடங்களாயின. அரசன் பஞ்சாயுதனைப் படிக்க வைக்க தட்சசீலத்திற்கு அனுப்பினான். அந்நாட்களில் அது
சிறந்த கல்விக் கூடமாக இருந்தது. பல பண்டித மேதைகள் அங்கு இருந்தனர். பஞ்சாயுதனும் அங்குபோய் எல்லா சாஸ்திரங்களையும் கற்றான்.
குருகுலத் தலைமை ஆசிரியர் பஞ்சாயுதனின் கல்வி முடிந்ததும் சிறப்பு மிக்க ஐந்து ஆயுதங்களை அவனுக்கு அளித்து ஆசி கூறி அனுப்பினார். பஞ்சாயுதனும் காசிக்குக் கிளம்பினான்.வழியில் அடர்ந்த காடு ஒன்றை அவன் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அக்காட்டில் அவனைக் கண்ட சில முனிவர்கள் "நீயோ சிறுவனாக இருக்கிறாய். இந்தக் காட்டில் ரோமாஞ்சன் என்ற பயங்கர ராட்சஸன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ பட்டால் உன்னைக் கொன்று தின்று விடுவான். எனவே நீ வேறு வழியில் செல்" என்று கூறினார்கள். பஞ்சாயுதனோ அதனால் சற்றும் பயப்படாமல் அதே வழியில் சென்றான். வழியில் அவன் பனைமர உயரமுள்ள ரோமாஞ்சன் என்ற ராட்சஸனைக் கண்டான். அவன் பார்க்க பயங்கரமாக பெரிய தலையுடனும் அனல் கக்கும் கண்களுடனும் இருந்தான்.
உடல் முழுவதும் கரடி போல அடர்ந்த ரோமம் வளர்ந்திருந்தது. ராட்சஸன் பஞ்சாயுதனை வழி மறித்து "யாரடா நீ! நில். எங்கே போகிறாய்? உன்னை அப்படியே விழுங்கப் போகிறேன்" என்று உரக்கக் கூவினான். பஞ்சாயுதன் சற்றும் பயப்படாமல் "அப்பா ராட்சஸனே! நீ இருப்பது தெரிந்துதான் இந்த வழியே வந்தேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் போய்விடு" என்று கூறி ஒரு அம்பை ராட்சஸன் மீது எய்தான்.
ஆனால் அந்த அம்பு ராட்சஸனை காயப்படுத்தவில்லை. அதனால் பஞ்சாயுதன் அம்புகளை அடுத்தடுத்து எய்து கொண்டே இருந்தான். அப்போதும் ராட்சஸனை அவை ஒன்றும் செய்யவில்லை. முடிவில் விஷம் தோய்ந்த அம்பை அவன் ராட்சஸன் மீது விடுத்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.
ராட்சஸன் பயங்கரமாகக் கத்தியவாறே பஞ்சாயுதன் மீது பாய்ந்தான். பஞ்சாயுதன் தன் வாளால் அவனைத் தாக்கினான். அப்போதும் அவன் அடங்கவில்லை. ராட்சஸன் பலமாகச் சிரித்து "பயலே! நீ விடாது என்னைத் தாக்க முயல்வதைப் பார்த்தால் நீ எல்லாரையும் போல அல்ல என்று நன்கு தெரிகிறது. மிகவும் பலமுள்ள என்னையே துணிந்து எதிர்த்து நிற்கிறாய். என்னைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்களே. உனக்கு அப்படி பயமே ஏற்படவில்லையா?" என்று கேட்டான். பஞ்சாயுதனும் "பயமா? பிறந்தால் என்றாவது இறக்கத் தானே வேண்டும்? என் உடலில் அபூர்வ சக்தி வாய்ந்த வாள் உள்ளது.
அதுதான் அறிவு என்பது. என்னை நீ விழுங்க முயன்றால் அது உன்னை அழித்து விடும்" என்றான். ராட்சஸன் சற்று யோசித்து விட்டு "நீ சொல்வது உண்மையா? அப்படியானால் உன் போன்ற சக்தி வாய்ந்தவனை நான் விழுங்கினால் ஜீரணிப்பது மிகவும் கஷ்டமே. எனவே உன்னை விட்டு விடுகிறேன். நீ உன் வழியே போ" என்றான்.
பஞ்சாயுதனாக அவதரித்த போதிசத்வர் ராட்சஸனை ஆசீர்வதித்து "என்னை விட்டு விட்டாயா? ரொம்ப சரி. ஆனால் உன் விஷயம் என்ன? இப்படியே கெட்ட வழியில்தான் போய்க் கொண்டே இருக்கப் போகிறாயா? அஞ்ஞானம் என்ற இருளில் இருக்கிறாயே. நீ திருந்திவிடு. பிறரைத் துன்புறுத்தாதே நல்லறிவு பெற்று நற்செயல்களையே புரி" என்றார்.
ராட்சஸன் அவரது ஒளி மிகுந்த உருவத்தாலும், பேச்சாலும் அடங்கி ஒடுங்கிக் கை கூப்பி "ஐயா மகானுபாவரே! நான் நல்லறிவு பெற என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவுடன் கேட்டான்.
போதிசத்வரும் "நீ இக்காட்டு வழியே வருபவர்களைக் கொன்று தின்று பாரமாக்கிக் கொள்கிறாய். அப்படி பாவம் அதிகரிக்க அதிகரிக்க நீ இந்த மாதிரி ராட்சஸனாகத்தான் பிறந்து உழல்வாய். இதனால் உனக்கு என்றுமே நற்கதி கிட்டாது. நீ உயர்ந்த மானிடப் பிறவி அடைய வேண்டுமானால் இப்படிப் பாவச் செயல்களைப் புரியாதே" என்று அறிவுரைகளைக் கூறினார்.
அவர் கூறிய ஐந்து நெறிகளைக் கேட்ட ரோமாஞ்சனின் மனம் மாறியது. அன்று முதல் கொடிய பாவச் செயல்கள் புரிவதை விட்டு விட்டான். அது மட்டுமல்ல அவ்வழியே வரும் வழிப்போக்கர்களை உபசரித்து உணவளித்து நற்பெயர் பெற்றான். இப்படியாக பயங்கரக் கொள்ளைக்காரனாக இருந்த ரோமாஞ்சனை போதிசத்வர் தம் அறிவுரையால் நல்லவனாகத் திருத்தி விட்டார். ரோமாஞ்சனும் தன் கெட்ட செயல்களை விட்டு நல்லவனான்.
பேராசை
at 9:35 AM {0 comments}
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் செருப்புத் தைக்கும் குடும்பத்தில் ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தார். அவர் பெரியவராகித் தன் குலத்தொழிலைச் செய்து ஒரு சித்த யோகியை அணுகி அவரிடமிருந்து ஒரு அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டார்.
அந்த மந்திரத்தைக் கொண்டு காய் காய்க்காத காலத்தில் கூட மாமரங்களில் மாம்பழங்களை வர வழைத்து அவற்றை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் காட்டிற்குப் போய் ஒரு மாமரத்தின் அருகே நின்று மந்திரம் ஓதியவாறே அவர் அதன் மீது நீரைத் தெளிக்க அம்மரம் பழங்களாகக் கீழே உதிர்த்து விழச் செய்யும். இவ்வாறு போதிசத்வர் செய்வதை ஒருநாள் சுநந்தன் என்ற அந்தண வாலிபன் பார்த்து விட்டான்.
அவன் எந்த வேலையும் செய்யாமல் தனக்குப் பணம் வந்து குவிந்து விட வேண்டும் என்று பகல் கனவு காண்பவன். அவன் போதிசத்வர் செய்த அற்புதத்தைக் கண்டதும் அவரிடம்இருந்து அந்த அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விடுவது என அவன் தீர்மானித்து அப்போது முதல் போதிசத்வருக்குப் பணிவிடைகள் செய்யலானான். கீழே விழுந்த பழங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு அவர் பின் நடந்து அவர் வீட்டில் கொண்டு போய் இறக்கினான். அவருடைய வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்தான்.
இதைக் கண்ட போதிசத்வர் தன் மனைவியிடம் "இவன் ஏன் இப்படி நமக்கு வேலை செய்கிறான் தெரியுமா? என்னிடமிருந்து அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொள்ளத் தான். இவன் அதனைக் கற்றுக் கொண்டாலும் வெகு சீக்கிரமே அதன் சக்தி இவனிடம் இல்லாமல் போய் விடும்" என்றார். அவரது மனைவியோ ‘பாவம்! எப்படி மாடு போல நம் வீட்டில் உழைக்கிறான்! நீங்கள் அவனுக்கு மந்திரத்தை உபதேசித்து விடுங்கள். பலிப்பதும் பலிக்காததும் அவனவன் தலை எழுத்தைப் பொறுத்தது" என்றாள்.
தேதி: 30th Jul, 2010ஆசிரியர்: அம்புலிமாமா |
சுநந்தனும் யாரிடமும் அந்த ரகசியத்தைக் கூறுவதில்லை என உறுதிமொழி அளித்து போதிசத்வரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் தினமும் நிறைய மாம்பழங்களை மரங்களில் தான் உபதேசம் பெற்ற மந்திரத்தின் சக்தியால் வரவழைத்து அவற்றை விற்று நிறையப் பணம் அடைந்து வரலானான். இவ்வாறு சுநந்தன் வரவழைத்து விற்ற மாம்பழங்களில் ஒன்று காசி மன்னனுக்குக் கிடைத்தது. அவன் மாம்பழக் காலமில்லாத காலத்தில் மிகப் பெரிய ருசியான மாம்பழம் கிடைத்தது கண்டு ஆச்சரியப் பட்டான். அத்தகைய பழம் எங்கே கிடைத்தது என விசாரிக்கலானான். சுநந்தன் தான் அதனை விற்றவன் என்பதை அவன் தன் ஆட்களிடம்இருந்து தெரிந்து கொண்டான். அவன் உடனே சுநந்தனை அழைத்து விசாரிக்கவே சுநந்தனும் "என்னிடம் அபூர்வ மந்திரசக்தி உள்ளது. அதனால் இத்தகைய பழங்களை வரவழைக்கிறேன்" என்று ஜம்பம் அடித்துக் கூறினான். அரசனும் அந்த சக்தியைக் காண விரும்பவே சுநந்தனும் பலர் முன்னிலையில் அரசனின் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தின் முன்போய் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரித்தான். மறு வினாடியே அம்மரத்தில் மாம்பழங்கள் தோன்றி கீழே விழுந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு காசி மன்னன் ஆச்சரியப் பட்டு "ஆகா! இந்த அற்புத மந்திரத்தை உனக்கு உபதேசித்த மகான் யார்? உடனே சொல்" என்று கேட்டான். சுநந்தன் முதலில் தான் அதனைக் கற்றது போதிசத்வரிடமிருந்து எனச் சொல்ல வேண்டாம் என நினைத்தான். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் கேட்கவே சுநந்தனும் போதிசத்வர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் தான் அந்த மந்திரத்தைக் கற்றது செருப்பு தைக்கும் குலத்தில் பிறந்த போதிசத்வரிடமிருந்து என்று கூறி விட்டான். இவ்வளவு சிரமப்பட்டு கற்ற மந்திரத்தின் சக்தி திடீரென்று தன்னை விட்டு விட்டுப் போய் விடவா போகிறது என அவன் எண்ணித் தன் குருவின் கட்டளையையும் மீறி ரகசியத்தை வெளியிட்டு விட்டான். காசி மன்னன் ஆச்சரியப் பட்டவாறே "அடேயப்பா! தாழ்குலத்தில் பிறந்த ஒருவனுக்கா இவ்வளவு சக்தி! பிராம்மணனாகிய நீ அவனிடம் உபதேசம் பெற்றது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப் படவில்லையா?" என்று கேட்டான். சுநந்தனும் பதில் எதுவும் கூறாமல் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றான். ஓரிரண்டு மாதங்களாயின காசி மன்னனுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் சுநந்தனை அழைத்து வரச் சொன்னான். சுநந்தன் வந்ததும் காசி மன்னன் அவனிடம் மந்திரத்தை உச்சரித்து முன் செய்தது போல இப்போதும் தனக்கு மாம்பழங்கள் வரவழைத்துக் கொடுக்கும்படிக் கூறினான். சுநந்தனும் மிகவும் கர்வத்தோடு முன் போல அரசனின் தோட்டத்திற்குப் போனான். அவனோடு காசி மன்னனும் மற்றும் பலரும் சென்றார்கள். சுநந்தனும் ஒரு மாமரத்தின் முன் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரிக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மந்திரமே ஞாபகத்திற்கு வரவில்லை. காசி மன்னனும் மற்றவர்களும் அது கண்டு ஆச்சரியப்பட்டனர். அப்போது சுநந்தன் "நான் என் குருவின் கட்டளையை மீறினேன். நான் யாரிடமிருந்து இந்த மந்திரத்தைக் கற்றேன் என்ற ரகசியத்தைக் காசி மன்னனிடம் கூறினேன். அதனால் எனக்கு அப்போது முதல் மந்திரம் பலிக்காது போயிற்று" என்று எல்லாரிடமும் கூறி விட்டு தலைகுனிந்தவாறே தன் வீட்டிற்குச் சென்றான். |
சிறுகதை - காசிக்குப் போறேன்
Sunday, July 4, 2010 at 3:47 AM {0 comments}
""மகனே! சவுக்கியமா? உன் மனைவி, குழந்தை குட்டிகள் நலமா? வாழ்க்கை எப்படி ஓடுகிறது? நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?'' என்று நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்டார். ""நீங்கள் கொடுத்த பணத்தைப் பார்த்ததும் என் மனைவி, தனக்கு நகைகள், பட்டுப்புடவை வேண்டும் என்றாள். அந்தப் பணத்திற்கு எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று தான் காலம் ஓடுகிறது. அதனால், நீங்கள் பணம் கொடுத்தும் எனக்கு எந்தப் பயனும் இல்லையப்பா!'' என்று சலித்துக் கொண்டான் அவன்.
இன்னொரு மகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க அவன் வீடு சென்றார். ""மகனே! உன் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?'' என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
""பத்திரமாக அப்படியே இருக்கிறது அப்பா. அதிலிருந்து ஒரு பைசாகூட எடுக்கவில்லை. அப்படியே அந்தப் பணத்தை நெற்குதிருக்கு அடியில் ஒரு குழி தோண்டிப் புதைத்து பத்திரமாக வைத்துள்ளேன். எடுத்துக் காண்பிக்கட்டுமா தந்தையே?'' என்றான்.
அவனை விட இவன் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். மூன்றாவது மகனிடம் சென்றார்.
""என்னப்பா... நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்? சவுகரியமாக இருக்கிறாயா? காசிக்குப் போனாலும் உங்கள் நினைப்பு தான். எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.''
""காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை என்பது இதுதான் போலும். அதற்கு நீங்கள் காசிக்கே போயிருக்க வேண்டாம். இங்கிருந்து கொண்டே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே!
""பணத்தைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? அதை மூலதனமாக வைத்து ஒரு சிறிய பெட்டிக் கடை ஆரம்பித்தேன். நம் ஊரில் கடையே இல்லையா? என் கடை ஊருக்கே பெரிதும் உபயோகமாக இருக்கிறது. எனக்கும் நல்ல லாபம்.
""இவ்வளவுக்கும், குறைந்த லாபம் வைத்துத்தான் விற்கிறேன். அப்படியும் நிறைய விற்பதால் லாபம் அதிகரித்துவிட்டது. கடையிலுள்ள சரக்கு, கையிலுள்ள ரொக்கம் எல்லாம் ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. இந்த ஆறு மாத காலமாக, கடை வியாபாரத்தில் வந்த லாபத்தில்தான் குடும்பமே நடந்தது!'' என்று கூறினான்.
""அப்பா! என் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் கடையில் அமர்ந்து கல்லாவை பார்த்துக் கொண்டால் போதும்... நான், சரக்குகள் எடுத்து வருவது போன்ற வெளி வேலைகளைச் செய்வேன். இன்னொரு கடையும் மலிவான விலைக்கு வருகிறது அப்பா... அதையும் வாங்கிப் போடப் போறேன்,'' என்றான் மகன். அதிசயத்துப் போனார் தகப்பனார். ஒன்றை பத்தாக்கும் புத்திசாலித்தனம் வேண்டும். அதைச் சின்ன மகன் நன்கு தெரிந்து வைத்துள்ளான் என்பதை நினைத்து மகிழ்ந்தார். மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பணம் கொடுத்தார். இருந்தும் மூவரும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முறையில்தான் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா குட்டீஸ்... மூளையை யூஸ் பண்ணுங்க.
???
at 3:43 AM {0 comments}
இல்லை; அமெரிக்கர்களுக்குத் தான் இதில் முதல் இடம். அங்கே 100க்கு 37 பேரும், சீனாவில் 21 பேரும், இந்தியாவில் 15 பேரும் இப்படி வெட்டி பொழுது போக்குகின்றனர் என்கிறது, "இன்டர்நேஷனல் ரிசர்ச் அசோசியேஷன்!' என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம்!