கிரிக்கெட்

20, 20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என கிரிக்கெட்டின் அனைத்து பிரிவுகளிலும் சதம் அடித்த ஒரே வீரர், மேற்க்கிந்திய தீவுகளின் கிரிஸ் கெயில்.

இங்கிலாந்துக்கும் மேற்க்கிந்திய தீவுகளுக்கும் நடந்த ஒரு போட்டியில், எல்லைக் கோட்டில் இருந்து வீசிய பந்து, ஒரு பக்க ஸ்டம்புகளை அடித்து அதே வேகத்தில் சென்று மறு பக்க ஸ்டம்புகளையும் அடித்தது. கிரிக்கெட் வரலாற்றில் இவ்வாறு நடந்தது ஒரே ஒரு முறை மட்டுமே.

பாகிஸ்தானின் ரமீஸ் ராஜா ஒரு முறை பேட்டிங் செய்யும் போது, நோ பால் பந்தில் கேட்ச் கொடுத்தார். அம்பயர் கூறிய நோ பால் அறிவிப்பை சரியாக கவனிக்காமல் பெவிலியன் திரும்பிவிட்டார். இறுதியில் அவர் ரன் அவுட் ஆனதாக ஸ்கொயர் லெக் அம்பயர் அறிவித்து விட்டார்.

டெஸ்ட் போட்டியின் ஒரே நாளில் அதிக ரன் குவித்த வீரர் சர் டான் ப்ராட்மேன். இங்கிலாந்திற்க்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் அவர் எடுத்த ரன்கள் 309.

முதன் முதலாக ஹெல்மெட் அணிந்து கிரிக்கெட் விளையாடிய வீரர் வர்கிரஹாம் யெல்லோப்.

கிரிக்கெட்டில் இது வரை மாறாத ஒரே விதி, கிரிக்கெட் பிட்சின் அளவு மட்டுமே!

0 comments: